Published : 03 Nov 2014 04:04 PM
Last Updated : 03 Nov 2014 04:04 PM

வாசகர்களுக்கு கவுரவம்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல்லை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு முதலில் வந்த வாசகர்கள் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிறிஸ்து ஞானவள்ளுவன், தூத்துக்குடி சங்கர சுப்பிரமணியன், வேம்பார் மு.க.இப்ராகிம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

வாசகர்கள் திருவருள் லத்தீப், ஜோபாய் பச்சேக், கிருஷ்ணவேணி, ஏ.ஜெயப்பிரகாஷ் நாராயணன், கோபால், மு.க.இப்ராகிம், கிறிஸ்துஞான வள்ளுவன், கர்னல் சுந்தரம், தனுஷ்கோடி, எம்பவர் சங்கர், எஸ்.கே.சாலிஹ் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை விழா மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

இனிமை பாடல்கள்

தூத்துக்குடி சாரதா கலைக்கூடத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் எஸ்.ராகுல், கே.எஸ்.ரமணா, கே.கிஷோர், எஸ்.ஸ்ருதிகா, எம்.ரேணுகா, ஆர்.யோகிதா, வி.கிருஷ்ணம்மாள் ஆகியோர் விழா மேடையில் பாரதியார் பாடல்களையும், 'எங்கள் ஊரிது..' என்ற தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா பாடலையும் இனிமையாக பாடி பார்வையாளர்களை ஈர்த்தனர். இப்பாடலை இயற்றி, இசையமைத்த ஆசிரியர் இசக்கிமுத்து கௌரவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x