Published : 09 Aug 2017 09:08 AM
Last Updated : 09 Aug 2017 09:08 AM

தலைமை நீதிபதி ஆகிறார் தீபக் மிஸ்ரா: ஜே.எஸ். கேஹர் 27-ம் தேதி ஓய்வு பெறுகிறார்

நீதிபதி தீபக் மிஸ்ராவை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மத்திய அரசு நேற்று நியமித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தற் போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் வரும் 27-ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு தீபக் மிஸ்ராவின் பெயரை அவர் பரிந்துரை செய்துள்ளார்.

நாட்டின் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா வரும் 27-ம் தேதி பதவியேற்பார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹருக்கு பிறகு மிகவும் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா ஆவார். ஒடிசாவில் இருந்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் 3-வது நபர் இவர். இதற்கு முன் நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, ஜி.பி.பட்டநாயக் ஆகியோர் இம்மாநிலத்தில் இருந்து தலைமை நீதிபதி பொறுப்புக்கு வந்துள்ளனர். 63 வயதாகும் தீபக் மிஸ்ரா அடுத்த ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x