Published : 08 Jul 2017 11:05 am

Updated : 11 Jul 2017 16:19 pm

 

Published : 08 Jul 2017 11:05 AM
Last Updated : 11 Jul 2017 04:19 PM

கலக்குது கைக்கூலி கைவிட்டோர் கழகம்

கைக்கூலி கைவிட்டோர் கழகம்..!’ என்ன, கழ கத்தின் பெயரைக் கேட்டால் கலவரமாக இருக்கிறதா? வரதட்சணைக் கொடுமை களுக்கு எதிராக திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய முற்போக்கு இயக்கம்தான் இது. இப் போது, ஏகப்பட்ட கிளைகள் பரப்பி நிற்கிறது.

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த அப்துல் அலீம்தான் இந்தக் கழகத்தின் பிதாமகன். முன்பெல்லாம், கூத்தாநல்லூரிலும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களிலும் கிலோக்களில் தங்கமும் வெள்ளியும், லட்சங்களில் ரொக்கமும் வரதட் சணையாகக் கேட்பார்கள். இதைக் கொடுத்தால்தான் பெண்களுக்குத் திருமணம் நடக்கும். இதனால், ஏழைகளுக்கு வரன் முடிப்பது குதிரைக் கொம்பாய் இருந்தது.

அப்போது, அப்துல் அலீம் திருச்சி ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர். தனது ஊர்ப்பக்கம் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் அதிகரித்து வருவதை எண்ணி சஞ்சலம் கொண்ட அலீம், வரதட்சணை சம்பிரதாயங்களுக்கு எதிராக கல்லூரிக்குள்ளேயே மாணவர் படை ஒன்றைத் திரட்டினார். இவரது முயற்சிக்கு விடுதிக் காப்பாளர் பேராசிரியர் சுஹர்வர்த்தியும் ஊக்கம் கொடுக்கவே, ‘கைக்கூலி கைவிட்டோர் கழகம்’ உருவானது. 1983-ல் பத்துப் பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கழகத்தில் இப்போது, சுமார் 1,600 பேர் அங்கத்தினர்கள்.கழகமும் ஒரு முக்கியக் காரணி

‘‘நான் உட்பட இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் பலரும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தவர்கள்தான். எங்களுக்கு அழைப்பிதழ் வந்தால், வரதட்சணை தவிர்க்கும் திருமணங்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ஒரு குழு சென்று மணமகனுக்கு சந்தன மாலை அணிவித்து கவுரவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ’நாக் கமிட்டி’ தர மதிப்பீட்டில் எங்களது கல்லூரிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்க கைக்கூலி கைவிட்டோர் கழகமும் ஒரு முக்கியக் காரணி’’ என்கிறார் கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மொகிதீன்.

அப்போது, அப்துல் அலீம் திருச்சி ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர். தனது ஊர்ப்பக்கம் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் அதிகரித்து வருவதை எண்ணி சஞ்சலம் கொண்ட அலீம், வரதட்சணை சம்பிரதாயங்களுக்கு எதிராக கல்லூரிக்குள்ளேயே மாணவர் படை ஒன்றைத் திரட்டினார். இவரது முயற்சிக்கு விடுதிக் காப்பாளர் பேராசிரியர் சுஹர்வர்த்தியும் ஊக்கம் கொடுக்கவே, ‘கைக்கூலி கைவிட்டோர் கழகம்’ உருவானது. 1983-ல் பத்துப் பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கழகத்தில் இப்போது, சுமார் 1,600 பேர் அங்கத்தினர்கள்.

கழகம் கடந்து வந்த பாதையை நம்மிடம் விவரித்தார் அப்துல் அலீம். ‘‘கூத்தாநல்லூரில் நடந்த வரதட்சணை திருமணங்களை விமர்சித்துப் பேசியும், ‘பிரதிபலிப்பு’ எனும் கையெழுத்து இதழில் எழுதியும் வந்ததால், எங்க ஊருக் காரங்களே என் மீது போலீஸில் புகார் கொடுத்து வழக்குப் போட வைத்தார்கள். அதைக் கண்டு பின்வாங்காத நான் முன்னைவிட வேகமாக இயங்க ஆரம்பித்தேன்.

வரதட்சணைக்கு எதிரான எங்களது செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு தமிழகத்தின் வேறு பல கல்லூரி களிலும் எங்கள் கழகத்தின் கிளைகளைத் தொடங்கி னார்கள். கழகத்தில் இருக்கும் மாணவர்கள் தங்கள் ஊர்களிலும் கிளை அமைப்புகளைத் தொடங்கி வரதட்சணைக்கு எதிராக இப்போது வரை தொடர்ந்து இயங்கி வரு கின்றனர்.’’ என்கிறார் அலீம்.

கல்லூரியைவிட்டுச் சென்ற பிறகு, கைக்கூலி கைவிட்டோர் கழ கத்தின் ஆலோசகராக தொடர்கிறார் அலீம். அதேசமயம், அவருக்குப் பின்னால் வழிவழியாய் வரும் மாணவர்கள் ஜமால் முகமது கல்லூரியில் இக்கழகத்தை உயிர்ப் புடன் வைத்திருக் கிறார்கள். ஊரகப் பகுதிகளில் நடக்கும் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம், தேசிய மாணவர் படை முகாம்களில் இவர்களின் வரதட்சணைக்கு எதி ரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் களைகட்டுகின்றன.

கைக்கூலி கைவிட்டோர் கழக வெளியீடுகளான பிரதிபலிப்பு, எதிரொலி இதழ்களில் வரதட்ச ணைக்கு எதிரான உரை வீச்சுகள் அனல் கக்குகின்றன. வரதட்சணைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இலவச சட்ட உதவி களையும் ஏழைகளுக்கான மருத் துவ, பொருளாதார, கல்வி உதவி களையும் இக்கழகத்தினர் அளித்து வருகின்றனர்.

‘‘தொடக்கத்தில், நாங்கள் வர தட்சணை எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது எங்கள் மீது கல்வீசித் தாக்கினார்கள். அதே ஊர்களில் இப்போது, எங்களின் நியாயத்தைப் புரிந்து கொண்டு மலர் தூவி எங்களை வரவேற்கிறார்கள். தற்போது, வரதட்சணை சம்பிர தாயங்கள் பெருமளவு குறைந்து விட்டாலும் ஆடம்பரத் திருமணங்க ளுக்காக கடன் வாங்கிக் கஷ்டப் படும் அவலங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கவும் இன்னொரு போருக்கு நாங்கள் தயாராக வேண்டி இருக்கிறது’’ என்கிறார் அப்துல் அலீம்.அப்துல் அலீம்

இஸ்மாயில் மொகிதீன்

'கைக்கூலி கைவிட்டோர் கழகம்'இஸ்மாயில் மொகிதீன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author