Published : 18 Jul 2017 03:57 PM
Last Updated : 18 Jul 2017 03:57 PM

எப்படி இருக்கிறது தி இந்து தமிழ் தளத்தின் புதிய வடிவம்?

புத்தம் புதிய வடிவத்தில் உங்கள் ‘தி இந்து’ இணையதளம்.. புதிய வடிவமைப்பு குறித்த உங்கள் கருத்தை அறிய காத்திருக்கிறோம்! வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்து தி இந்து (தமிழ்) இணையதளத்தை புதிதாக வடிவமைத்துள்ளோம்.

தரமான செய்திகளை வாசகர்கள் படித்து மகிழ தற்காலத்துக்கு ஏற்ற வடிவமைப்பில் தந்துள்ளோம். டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லட், மொபைல் என நீங்கள் தி இந்து இணையதளத்தை எந்த வகையான வாசிப்பு தளத்திலும் படிக்க ஏற்ற வகையில் இப்புதிய வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மொபைலில் நமது தளம் அணுக மிக எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சினிமா, அரசியல், சமூகப் பிரச்சினைகள், நகைச்சுவை மற்றும் வாழ்வியல் தொடர்பான வீடியோ, போட்டோ கேலரி, உள்ளிட்ட சிறந்த ஒலி / ஒளி படைப்புகளை உங்கள் மனங்களைக் கவரும் வகையில் அமைத்திருக்கிறோம். எளிதாக வாசிக்கக்கூடிய வகையிலும், தளத்துக்குள் உலாவும் வகையிலும், தகவல் கட்டமைப்பு, வண்ணக் குறியீடு என தளத்தின் உள்ளடக்கங்கள் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு கட்டுரை / செய்தியிலிருந்து மற்றொரு செய்தி / கட்டுரைக்கு எளிதில் செல்லும் வகையில் ஒவ்வொரு பக்கத்தின் முகப்பிலும் நிலையான இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் செக்‌ஷன் தலைப்புகளை பார்க்கவோ, மறைக்கவோ முடியும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இது வாசகர், தான் படிக்கும் பக்கத்தின் அளவை தீர்மானித்துக் கொள்ள உதவும்.

வாசகர்கள் எந்த தளத்தில் படித்தாலும் (டெஸ்க்டாப், மொபைல் மற்றும் டேப்லெட்) கண்ணுக்கு இதமான, எளிதில் படிக்கக் கூடிய எழுத்துருக்கள் (Fonts)பயன்படுத்தப்பட்டுள்ளன. செய்தியாளர், செய்தி தலைப்பு மற்றும் செய்தி உள்ளடக்கம் வாரியாக செய்தியை தேடும் வகையில் தளத்துக்குள் இருக்கும் தேடியந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ் நேரப் பதிவுகளையும், சமீபத்திய செய்திகளையும், பிரபல நிகழ்வுகளையும் வாசகர்கள் அறியும் வண்ணம் ‘உடனுக்குடன்’ ‘சுடச்சுட’ போன்ற தலைப்புகளில் வாசகர்களுக்கு அளித்துள்ளோம். படித்ததில் பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர இப்புதிய வடிவமைப்பில் வழி அமைத்துள்ளோம்.

நம் தளத்தின் புதிய வடிவமைப்பு குறித்த உங்கள் மேலான கருத்துக்களை இங்குள்ள படிவத்தில் எங்களுடன் பகிருங்கள். தளத்தை இன்னும் மேம்படுத்த அவை நிச்சயம் உதவும். காத்திருக்கிறோம் - உங்கள் கருத்துகளுக்காக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x