Published : 04 Jul 2017 10:03 AM
Last Updated : 04 Jul 2017 10:03 AM

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய அஞ்சல் நிலையங்களில் சிறப்பு திட்டம் தொடக்கம்

அஞ்சல் நிலையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற் கான சிறப்பு திட்டம் நேற்று தொடங் கப்பட்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை மேம்படுத் துவதற்கான வசதியினை அஞ்சல கங்கள் மூலம் நடைமுறைப்படுத்த, இந்திய அஞ்சல் துறை, ‘உடாய்’ (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, சென்னையில் 10 அஞ்சலகங்களில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல் களில் திருத்தம் செய்து விவரங் களை மேம்படுத்திக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு திட்டத்தை அண்ணா சாலை தலைமை அஞ்சல கத்தில் தலைமை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை அஞ்சலக அலுவலகம் (ஜி.பி.ஓ), அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், தி.நகர் தலைமை அஞ்சலகம், மைலாப்பூர் தலைமை அஞ்சலகம், பரங்கிமலை தலைமை அஞ்சல கம், பூங்கா நகர் தலைமை அஞ்ச லகம், தேனாம்பேட்டை துணை அஞ்சலகம், அண்ணாநகர் துணை அஞ்சலகம், அசோக் நகர் துணை அஞ்சலகம், திருவல்லிக்கேணி துணை அஞ்சலகம் ஆகியவற்றில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த வசதி தமிழகத் தில் உள்ள 2, 505 அஞ்சலகங்களி லும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆதார் அட்டையில் பொது மக்கள் தங்கள் விவரங்களை மேம் படுத்த ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அத்துடன் இந்த விவரங்களை கலர் பிரின்ட் எடுக்க ரூ.20-ம், கறுப்பு வெள்ளையில் பிரின்ட் எடுக்க ரூ.10-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x