

உடம்பைத் தண்ணீருக்குள் மறைத்துக் கொண்டு கழுத்தை மட்டும் வெளியில் நீட்டியிருக்கையில், ஏதோ பாம்பு போலிருக்கிறதே என்று எண்ணத் தோன்றும். மிதந்து வரும் மீனை லாவகமாக வீசிப் பிடித்து விளையாடும் போதுதான் அது பறவை என்று தெரியவரும். ‘இந்தியன் டார்ட்டர்’தான் இப்படி நமக்கு வித்தைகாட்டும் அந்த அழகிய பறவை
‘ஓரியண்டல் டார்ட்டர்’ அல்லது ‘இந்தியன் டார்ட்டர்’ அன்று சொல்லப்படும் இந்தப் பறவையானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீர்ப்பறவை. இது, நேர்த்தியான மெல்லிய கழுத்தையும் நேராக, கூட்டிணைந்த நீண்ட அலகுகளையும் தன்னகத்தே கொண்டது. ‘டார்ட்டர்’ நீரில் முழ்கி இருந்தால் வேட்டைக்குக் காத்திருக்கிறது அல்லது தலைமுக்கிக் குளிக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
மீனைப் பிடிக்கும் லாவகம்
குளித்து முடித்த பின்பு, மரக்கிளைகளில் அமர்ந்து தனது இறக்கைகளை உலர்த்தும். நீரில் மூழ்கி மீன்களை பிடித்துவிட்டால், தன் தலையை நீரின் மேல்பரப்புக்குக் கொண்டு வந்து, கவ்விய மீனை லாவகமாகத் தூக்கி வீசி அதன் தலை திருப்பிப் பிடித்துச் சாப்பிடும் தில்லான பறவை இது. உடல் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கையில், இதன் மெல்லிய கழுத்து மட்டுமே தண்ணீருக்கு வெளியே பாம்பு போல் தெரியும். அதனாலேயே மக்கள் இதை சாதாரணமாக, ‘பாம்புப் பறவை’ என்பார்கள்.
லேசான இறகுகள் கொண்ட ‘இந்தியன் டார்ட்டர்’ பறவைகளை கோவையில் செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், சுண்டக்கா முத்தூர் குளம், குறிச்சிக்குளம், வாலாங்குளம், வேடப்பட்டிகுளம் உள்ளிட்ட குளங்களில் முன்பு அதிகமாகப் பார்க்கலாம். ஆனால், சமீபகாலமாக கோவைப்பகுதி குளங்களில் இந்தப் பறவைகள் அருகிவிட்டதாகச் சொல்கிறார்கள் பறவைக் காதலர்கள். இது, நேர்த்தியான மெல்லிய கழுத்தையும் நேராக, கூட்டிணைந்த நீண்ட அலகுகளையும் தன்னகத்தே கொண்டது.
லேசான இறகுகள் கொண்ட ‘இந்தியன் டார்ட்டர்’ பறவைகளை கோவையில் செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், சுண்டக்கா முத்தூர் குளம், குறிச்சிக்குளம், வாலாங்குளம், வேடப்பட்டிகுளம் உள்ளிட்ட குளங்களில் முன்பு அதிகமாகப் பார்க்கலாம். ஆனால், சமீபகாலமாக கோவைப்பகுதி குளங்களில் இந்தப் பறவைகள் அருகிவிட்டதாகச் சொல்கிறார்கள் பறவைக் காதலர்கள்.
அபூர்வமாகி வருகிறது
இதுகுறித்து நம்மிடம் பேசிய வடவள்ளியை சேர்ந்த பறவை ஆர்வலர் சுப்பிரமணியன், ‘‘இதமான தட்பவெப்பம் நிலவுவதால் கோவைப் பகுதியில் உள்ள குளங்களில் பெலிகான், நத்தைக்கொத்தி நாரை, வெள்ளைக் கொக்கு, நீர்க்காகங்கள் என சீசனுக்கு சீசன் பறவைகள் நிறைந்து காணப்படும். ஆனால், கடந்த ரெண்டு மூணு வருஷமா குளங்களில் பறவைகளைப் பார்ப்பதே அபூர்வமாகி வருகிறது. அந்த அளவுக்கு கடும் வறட்சி!
இதனால், சராசரி பறவைகளின் வருகையே பத்தில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. அதிலும் இந்த ‘இந்தியன் டார்ட்டர்’ பறவைகளை இங்குள்ள குளங்களில் அறவே காணமுடிய வில்லை. நானும் 20 வருசத்துக்கும் மேலாக பறவைகள், பட்டாம் பூச்சிகள் உள்ளிட்ட பல்லு யிரிகளையும் மணிக் கணக்கில் காத்திருந்து படம் எடுத்து வருகிறேன். அந்த வகையில், ‘இந்தியன் டார்ட்டர்’ பறவை இந்தளவுக்குக் குறைந்து காணப்படுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.
முன்பெல்லாம் வருடத்தில் பாதி நாட்கள் எல்லா குளங்களிலும் 20 - 30 என்ற எண்ணிக்கையில் இந்த பறவைகளைக் காணமுடியும். ஆனால் இப்போது, ஏதாவது ஒரு குளத்தில் எப்போதாவது அபூர்வமாக மட்டுமே ஓரிரு பறவைகளைப் பார்க்க முடிகிறது. இந்தப் பறவைகள் அதிக அளவில் இங்கு வந்து போவதற்கான சூழலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் மீண்டும் உருவாக்க வேண்டும்” என்றார்.
சுப்பிரமணியன்