Published : 26 Jul 2017 10:25 am

Updated : 26 Jul 2017 10:31 am

 

Published : 26 Jul 2017 10:25 AM
Last Updated : 26 Jul 2017 10:31 AM

இந்தியாவுடனான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம் - சீன நாளிதழ் நம்பிக்கை

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா செல்ல உள்ள நிலையில், எல்லை பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும் என்று சீன நாளிதழ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க சீன ராணுவம் கடந்த மாதம் முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரு நாட்டு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எல்லையில் படையை வாபஸ் பெற வேண்டும் என்று இரு நாடு களும் பரஸ்பரம் கூறி வருகின்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா) நாடுகளின் தேசிய பாதுகாப்பு அலோசகர்கள் கூட்டம் பெய்ஜிங்கில் நாளை நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற் காக பெய்ஜிங் செல்லும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியை தனியாக சந்தித்துப் பேசுகிறார். அப்போது எல்லைப் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்து வார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ‘தி சைனா டெய்லி’ நாளிதழின் தலையங்கத் தில், “இந்தியா போரிடும் மன நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இங்கு வருகிறார். இதன்மூலம் இந்தியாவில் நிலை யில் சற்று மாற்றம் ஏற்பட்டுள் ளதாகத் தெரிகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கிடைக் கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் கருத்து வேறுபாடுகள் மோதலாக உருவெடுக்க அனு மதிக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறியிருந்தார். எனவே, இரு நாடுகளும் மோதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ மோதலை தவிர்க்கா விட்டால் இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் எல்லையில் இந்திய படைகள் வாபஸ் பெறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த இதழில், “இரு நாடு களுக்கிடையிலான மோதலுக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் அஜித் தோவல். எனவே, இவரது சீன பயணத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என இந்திய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஆனால், இதுபோன்ற கற்பனையை இந்தியா கைவிட வேண்டும். தோவலின் இந்த பயணத்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.மேலும் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் கற்பனையில் மிதக்கக் கூடாது என சீன பாதுகாப்பு அமைச் சகம் கூறியதை இந்தியா சாதார ணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author