Published : 21 Jan 2014 03:37 PM
Last Updated : 21 Jan 2014 03:37 PM

2 ஆயிரம் பேருக்கு 2 பொதுக் கழிப்பிடங்கள்- திருவல்லிக்கேணி பகுதி மக்கள் அவதி

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணியில் உள்ள 62 வது வட்டம் ஐந்து குடிசை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ’ஐந்து குடிசை’ கள் மட்டும் இருந்ததாம். அதனால் இந்த பகுதிக்கு ஐந்து குடிசை என்று பெயர் வந்ததாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 2 ஆயிரம் மக்கள் இங்கே வசிக்கின்றனர்.அவர் களின் குடிசை வீடுகள் அதிகபட்ச மாக பத்துக்கு பத்து அடி அளவு மட்டுமே கொண்டுள்ளது. இந் நிலையில் அவர்களுடைய வீடு களில் தனி கழிப்பிடம் அமைப்பது என்பது சாத்தியம் இல்லாததாக இருக்கிறது.

பகுதி மக்கள் அனைவரும் கழிப்பிட தேவைக்காக பயன் படுத்துவது இங்குள்ள பொது கழிப்பிடங்கள்தான். இங்குள்ள 2 பொதுக் கழிப்பிடங்களில் ஆண்களுக்கு நான்கு கழிப்பிட அறை களும் பெண்களுக்கு நான்கு அறைகளும் மட்டும் உள்ளன.

மொத்தமாக உள்ள 8 கழிப்பிடங் களை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருவதால் இந்தக் கழிப்பிடங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.

இந்தப் பகுதியில் வசித்து வரும் அசோக் என்பவர் கூறுகையில்:- அடைப்பு ஏற்பட்டுள்ள கழிப்பிடத் தின் அருகில்தான் என்னுடைய வீடு உள்ளது.

சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்தக் கழிப்பிடத்தின் அருகில் வசிப்பதால் குழந்தை களுக்கு நோய் தாக்கி மாதத்திற்கு மூன்று முறையாவது மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டி யுள்ளது. கழிப்பிடத்தில் இருந்து வரும் நாற்றத்தால் வீடுகளுக் குள்ளே இருக்க முடியவில்லை என்றார்.

2 கழிப்பிடங்களை இரண்டா யிரம் மக்கள் பயன்படுத்துவ தாலும், அருகில் இருக்கக் கூடிய சாமிநாதன் தெரு, ஐயா முதல் தெரு, பழனி ஆண்டவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வரும் கழிவுநீர் ஐந்து குடிசை பகுதியில் உள்ள ஒரே கழிவுநீர் கால்வாயில் கலப்பதாலும் அங்கு இருக்கும் பொதுக் கழிப்பிடம் கடந்த ஆறு மாத காலமாக அடைத்துக் கொண்டுள்ளது.

அதனால் அருகில் இருக்கும் நெடுஞ்செழியன் நகர் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தி வருகிறோம். தினமும் காலை நேரத்தில் அந்த பொதுக் கழிப்பிடத்தில் முப்பது பேர் வரை வரிசையாக நிற்கிறோம்.

அருகில் கழிப்பிடம் இல்லாததால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிகளுக்குத் தாமதமாகச் செல்ல வேண்டியுள்ளது என்று ரேணுகா என்பவர் கூறினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஐந்து குடிசை பகுதி செயலாளர் சுரேஷ் கூறுகையில்:-போராட்டங்கள் நடத்தும் போது தான் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. 2 ஆயிரம் மக்கள் இருக்கும் பகுதியில் புதிய கழிப்பிடம் அமைக்க வேண்டும். புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பகுதி பொறியாளர்கள் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த வேலையும் நடக்கவில்லை என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:-ஐந்து குடிசை பகுதியில் உள்ள இரண்டு பொதுக் கழிப்பிடங்களைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாயினை மாற்றி புதிய குழாய் அமைக்கும் பணி வரும் 15 நாட்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

பகுதி மக்கள் அனைவரும் கழிப்பிட தேவைக்காக பயன்படுத்துவது இங்குள்ள பொது கழிப்பிடங்கள்தான். இங்குள்ள 2 பொதுக் கழிப்பிடங்களில் ஆண்களுக்கு நான்கு கழிப்பிட அறைகளும் பெண்களுக்கு நான்கு அறைகளும் மட்டும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x