Published : 24 Jan 2014 07:46 PM
Last Updated : 24 Jan 2014 07:46 PM

வெளிநாட்டுப் பெண்களைக் கைகோர்க்கும் குமரி இளைஞர்கள்: அடுத்தடுத்து நடக்கும் திருமணங்கள்

தமிழ் கலாச்சாரம், பண்பாட்டால் ஈர்க்கப்பட்ட சீனப்பெண்கள், கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களைக் காதலித்து, கரம்பிடிப்பது தொடர்கிறது. ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வியாழக்கிழமை களைகட்டியிருந்தது. சுவாமியை தரிசனம் செய்ய வந்தவர்கள் ஆச்சரியம் விலகாமல், அதிகாலையில் நடை பெற்ற அந்த திருமணக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆரல்வாய்மொழி தெக்கூரைச் சேர்ந்த நல்லபெருமாள், ஆவுடையம்மாள் தம்பதியின் மகன் ஐயப்பன் (24). பேஷன் டெக்னாலஜி படித்து விட்டு, மாலத்தீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிகிறார். இதே ஹோட்டலில் சீனா நாட்டின், டாங்ஷூ பகுதியில் உள்ள, பியூசன் சிட்டியைச் சேர்ந்த யான்பூ ஷாவோ - யிங்லி தம்பதியின் மகள் சாங்சூ ஷாவோ (24) வரவேற்பாளராக பணிபுரிகிறார். தமிழ் கலாச்சாரத்திலும், ஐயப்ப னின் நடவடிக்கைகளிலும் ஈர்க்கப் பட்டார் சாங்சூ ஷாவோ. மாலத்தீவில் மலர்ந்த காதல், ஆரல்வாய்மொழியில் திருமணத்தில் முடிந்தது.

கலாச்சார ஈர்ப்பு

பட்டு வேட்டி, சட்டையணிந்து ஐயப்பனும், பட்டுப்புடவை அணிந்து சாங்சூ ஷாவும் மணமேடைக்கு வந்தனர்.காலை 5.30-க்கு தாலி கட்டினார். தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து சீனப் பெண் தமிழ் பெண்ணாக மாறினார். மணமகள் சாங்சூ ஷா கூறுகையில், “தமிழ் கலாச்சாரம், பண்பாடு ரொம்ப பிடிக்கும். ஐயப்பனை அது தான் காதலிக்க வைச்சுது” என்றார். கடந்த சில மாதங்களாக, வெளிநாட்டுப் பெண்களை, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் கரம் பிடிப்பது அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x