Published : 28 Jan 2014 08:30 PM
Last Updated : 28 Jan 2014 08:30 PM

பராமரிப்பு இல்லாத வேலூர் கோட்டை பூங்கா: நடவடிக்கை எடுக்குமா தொல்லியல் பூங்கா

வேலூர் கோட்டையின் இருபுறமும் உள்ள பூங்காவை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலூர் மக்கள் மற்றும் வெளி யூர்களில் இருந்து வரும் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக கோட்டை அமைந்துள்ளது. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வருபவர்கள் அங்குள்ள அருங்காட்சியம், கோட்டை மதில் சுவர்களை சுற்றி பார்வையிடுகின்றனர். மாலை நேரங்களில் கோட்டைக்கு வருபவர்களில் பெரும்பாலும் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள பூங்காவுக்கு குடும்பத்துடன் வருவதையே விரும்புகின்றனர்.

கோட்டை நுழைவு வாயிலுக்கு இருபுறமும் 2 பூங்காக்கள் உள்ளன. இதில் சாரதி மாளி கைக்கு எதிரில் உள்ள ஒரு பூங்கா வை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பூங்கா இரவு 8 மணி வரை திறந்திருக்கிறது. ஓரளவுக்கு பராமரிக்கப்படும் இந்த பூங்காவில் பொதுமக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனால், கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள தனியார் பூங்காவுக்கு செல்வதை சிலர் விரும்பு கின்றனர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காவில் உட்காரும் நாற்காலி, சிறந்த நடைபாதை என அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

அதேநேரம், கோட்டை அகழி படகு போக்குவரத்து பகுதியில் உள்ள பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள அழகிய சிற்பங்கள் பல பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துவருகிறது. முறை யான பராமரிப்பு இல்லாத காரணத்தால் செடிகள், புற்கள் வளர்ந்துள்ளது. மரங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்? என்றும் தெரிவதில்லை.

புதர்களால் மண்டியிருக்கும் பூங்காவில் பகல் நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே, இந்த பூங்காவை தொல்லியல் துறையினர் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றிக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மேலும், கோட்டை சுற்றுச் சாலையில் சேதமடைந்த அகழிச் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது. அந்த பகுதியில் மேலும் ஒரு பூங்கா அமைத்து மேம்படுத்தினால் பொது மக்க ளுக்கு வசதியாக இருக்கும். தற்போதுள்ள பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் திணறிவருகின்றனர். கோட்டை சுற்றுச்சாலையில் வாகனம் நிறுத்தும் இடத்துடன் பூங்கா அமைத்தால் வாகன நெரிசலும் இருக்காது என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது தொல்லியல் துறையின் தோட்டக்கலை பிரிவின் கீழ் 2 பூங்காக்கள் பராமரிக்கப் படுகிறது. இதற்கான ஆட்கள் தினமும் பராமரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இதில், மக்கான் சந்திப்பு பகுதிக்கு அருகில் உள்ள பூங்கா மட்டும் கொஞ்சம் சரியில்லை. இதனை எதிர்காலத்தில் சரி செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இதற்கான பணி நடைபெறும். கோட்டை சுற்றுச்சாலையிலும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

கூலித் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் வேலூர் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். செலவே இல்லாமல் இவர்களுக்கு பொழுதுபோக்கு என்றால், கோட்டை தான். கோட்டை மைதானத்தில் தனியா ரால் அடிக்கடி நடத்தப்படும் பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணம் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு இருக்கிறது. இதனால் அவர்களால் அங்கே நுழையக் கூட முடியாத நிலை.

ஓரளவு நன்கு பராமரிக்கப்பட்டு வரும் பெரியார் பூங்காவிலும் நுழைவுக்கட்டணத்தை கேட்டாலே பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். நின்றால் காசு, நடந்தால் காசு என்று பாக்கெட்டை காலி செய்வதிலேயே அங்கேயும் குறியாக இருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு கோட்டைப் பூங்கா மட்டுமே. அதையாவது சரிவர பராமரிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x