

கோடைக் காலம் தொடங்கிய தால் ரயில் நிலையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் விற்கப்படும் “ரயில் நீரை” (ஒரு லிட்டர் ரூ.15) வாங்கிக் குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ரயில் பயணிகள் தள்ளப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் புகார் கூறிகின் றனர்.
இதுகுறித்து அகில இந்திய ரயில் மற்றும் பேருந்து பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் டி.ரவிக் குமார் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் அனைத்து பிளாட்பாரங்களிலும் குடிநீர் குழாய் பொருத்தப்படவில்லை. அப்படி பொருத்தப்பட்ட குழாய் களிலும் சீராக குடிநீர் வருவ தில்லை. ரயில் கட்டணத்தில் ஒரு சதவீதம் பயணிகளின் அடிப்படை வசதிக்காக ஒதுக்கப்படுகிறது. குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி அடிப்படை வசதிகளாகும். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
திருநின்றவூர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் முருகையன் கூறுகையில், “சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மட்டுமல்லாமல் திருவள்ளூர், அரக்கோணம், திருநின்றவூர் போன்ற இதர ரயில் நிலையங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ரயில் நிலையங்களில் குழாயில் குடிநீர் வந்து நீண்டநாள்களாகிறது. ரயில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது ரயில்வே துறையின் கடமை. அதை ரயில்வே நிர்வாகம் செய்வதேயில்லை” என்றார்.