

இந்தியாவின் முன்னணி நிறுவனமான லோதா குழுமத் தினுடைய நிர்வாக இயக்குநர். 2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஸ்ரீநிவாஸ் காட்டன் மில்ஸ் நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
மெக்கென்ஸி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளராக பணிபுரிந் தவர்.
2007-ம் ஆண்டு முதல் பேக்லைட் ஹைலம் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இண்டஸ்ட்ரீயல் இன்ஜினீயரிங் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
கார்ப்பரேட் மேனேஜ்மெண்ட் துறையில் 15 ஆண்டு காலம் பணி அனுபவம் கொண்டவர்.
2009-ம் ஆண்டு எகானாமிக் டைம்ஸ் பத்திரிகை வழங்கிய `உள்கட்டமைப்பு தலைவர்’ விருதை வென்றவர்.
லோதா குழுமத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.