Last Updated : 05 Feb, 2014 12:00 AM

 

Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

8 நிலையங்கள் இடையே சுரங்கப் பாதை தயார்- விறுவிறுப்பாக நடக்கும் மெட்ரோ ரயில் பயணிகள்

சென்னையில் இரு மார்க்கத்தில் 12 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையும் 19.5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையும் அமைக்கப்பட்டுவிட்டது. சுரங்கப் பாதை அமைப்பதில் மூன்றில் ஒரு பங்கு பணிகள் முடிந்துள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறினார்.

சென்னையில் வண்ணாரப் பேட்டை - விமான நிலையம் (23.1 கி.மீ.), சென்ட்ரல் - பரங்கிமலை (22 கி.மீ.) என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. பறக்கும் பாதை, சுரங்கப் பாதை, ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ரூ.14,600 கோடியில் துரிதமாக நடந்துவருகின்றன. முதல்கட்டமாக வரும் அக்டோபரில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பறக்கும் பாதையைப் பொருத்தவரை இரு மார்க்கத்திலும் 19.5 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டது. சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் 12 டன்னல் போரிங் மிஷின்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுரங்கப் பாதை இரு மார்க்கத்திலும் மொத்தம் 36 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதுவரை 12 கி.மீ. தூரத்துக்கு (3-ல் ஒரு பங்கு) சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது.

நேரு பூங்கா - எழும்பூர் சுரங்க ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டை - மண்ணடி சுரங்க ரயில் நிலையம், ஷெனாய் நகர் - அண்ணாநகர் கிழக்கு சுரங்க ரயில், அண்ணாநகர் கிழக்கு - டவர் பார்க் சுரங்க ரயில் நிலையம் ஆகிய 8 ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது.நேரு பூங்கா - எழும்பூர் சுரங்க ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப் பாதை தோண்டிய ராட்சத டன்னல் போரிங் மிஷின்கள் வேறு இடத்தில் சுரங்கப் பாதை தோண்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒன்று, பச்சையப்பன் கல்லூரி - நேரு பூங்கா இடையேயும், மற்றொன்று பச்சையப்பன் கல்லூரி - கீழ்பாக்கம் இடையேயும் சுரங்கப் பாதை தோண்டும் பணியை விரைவில் தொடங்குகின்றன. மற்ற இடங்களில் சுரங்கம் தோண்டும் பணியை முடித்துவிட்ட டன்னல் போரிங் மிஷின்களும் தனித்தனியாக பிரித்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x