

தாய்லாந்து போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பேன் என்று அந்த நாட்டு அரசால்வெளியேற்றப்படும் இந்தியதொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
இந்திய-தாய்லாந்து வர்த்தக கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சதீஷ் சேகல். அவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வருகிறார். தற்போது அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக சதீஷ் சேகல் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசு அண்மையில் முடிவு செய்தது. அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிலதிபர் சதீஷ் சேகல், அரசுக்கு எதிரான தாய்லாந்து மக்களின்போராட்டங்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன்என்று தெரிவித்தார்.