பொது மருத்துவமனை புதிய டீன் பொறுப்பேற்பதில் தாமதம்: மாறுதல் ஆணை கிடைக்கவில்லை

பொது மருத்துவமனை புதிய டீன் பொறுப்பேற்பதில் தாமதம்: மாறுதல் ஆணை கிடைக்கவில்லை
Updated on
1 min read

மாறுதல் ஆணை கிடைக்காததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டீன் பொறுப் பேற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி டீனாகவும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ) இயக்குநராகவும் இருந்த டாக்டர் வி.கனகசபை கடந்த ஜனவரி 31-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை டீனாக பதவி வகித்து வந்த டாக்டர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப் பட்டார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக (பொறுப்பு) டாக்டர் ஜெயராமன் நியமனம் செய்யப் பட்டார். இந்நிலையில், கோயம்பத்தூர் மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை டீனாக உள்ள டாக்டர் ஆர்.விமலா, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக நியமிக்கப்படுவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அறிவித்தது. ஆனால், அதற்கான மாறுதல் ஆணை கிடைக்காததால், டாக்டர் ஆர்.விமலா டீனாக பொறுப்பேற்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 3ல் பொறுப்பேற்பு

டாக்டர் ஆர்.விமலா கூறுகையில், “சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக என்னை நியமித் துள்ளனர். ஆனால், மாறுதல் ஆணை இன்னும் கிடைக்க வில்லை. ஆணை கிடைத்தவுடன் மார்ச் 3-ம் தேதி டீனாக பொறுப்பேற்ற இருக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in