Last Updated : 11 Apr, 2017 05:20 PM

 

Published : 11 Apr 2017 05:20 PM
Last Updated : 11 Apr 2017 05:20 PM

இப்பொழுதும்கூட மாணவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம், எந்தத் தடையுமில்லை!

அமெரிக்காவில் கல்வி பயில முனையும் இந்தியர்கள் கவலைப்பட எந்த அவசியமும் இல்லை. ட்ரம்ப்பின் அதிகாரத்தில் வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளன. தவறாக உருவாக்கப்பட்ட கருத்துக்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மன்ஹாட்டன் பாலத்திற்கும் வீட்டிற்கும் இடையில் நடந்துசெல்லும்போது, நியூயார்க் வானவெளியின் காட்சியால் ஒரு கணம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. சுதந்திரதேவிச் சிலை, விண்ணை முட்டும் கிரைஸ்லெர் கட்டிடம், தி எம்பையர் ஸ்டேட் கட்டிடம், தி நியூயார்க் டைம்ஸ் கட்டிடம் இன்னும் பல நகரின் உயர்ந்த கட்டிடங்கள் வானத்து நட்சத்திரங்களைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

நான் இத்தகைய காட்சிகளைக் கொண்டு எந்தவிதமான சிந்தனையை என் கற்பனையில் கொண்டுவர முயல்கிறேன் என்றால் இந்தக் கல்வியாண்டில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இளைய மனங்கள் தயாராகிவருவதில் திடுமென்று ஏற்படுட்டுள்ள சில சிக்கல்களைத்தான்.

இது எவ்வாறாயினும், வீட்டை நெருங்கும்போது, கிளர்ச்சியடைந்து ஆரவாரமாக வரவேற்றான் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டேன்டான் பொறியியல் பள்ளியின் மாணவர் சேர்க்கைத் துறையோடு நெருக்கமாக பணியாற்றிவரும், என் அறைத்தோழன். காரணம் அங்கு இந்திய மாணவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் மிகவும் குறைந்து காணப்பட்டது, நம்பமுடியாதவகையில் நின்றும்போய்விட்டதாம்.

சில மணித்துளிகளில் தாமதமாக, நான் இந்தியாவிலிருந்து என் நண்பன் தாமஸ், என்னை தொலைபேசியில் அழைத்தான், அவன் ஒரு கேள்வியையும் என்னிடம் கேட்டான். நான் இதற்குமுன் அப்படியொரு கேள்வியை அவனிடமிருந்து கேட்டதேயில்லை. அதேநேரம் கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வியும் அது. ''நான் எனது மேல்படிப்பை அமெரிக்காவில் தொடர்வதை கைவிடவேண்டும் போலிருக்கிறதே?''

இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக அமெரிக்காவை நாடிவரும் ஒரு நடைமுறை கடந்த பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. 2015 -2016 ஆம் கல்வியாண்டில் மட்டும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கவந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. இதுவரை வந்த ஆண்டுகளைவிட 15 சதவீதம் அதிகமாக 1,65,918 மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி பயில வந்திருந்தனர்.

அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்புவதில் சீனாவுக்கு இரண்டாவது இடத்திலேயே இந்தியா இருக்கிறது. இந்த முன்னேற்றம் வெள்ளை மாளிகையில் நிகழ்ந்துள்ள டோனால்ட் ஜே. ட்ரம்ப்பின் எழுச்சியால் ஆட்டம் கண்டுவருகிறது.

அமெரிக்காவில் இத்தகைய ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டுவரும் நிலை தொடர்ந்து உயர்ந்துவருவதைப் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்புவோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தகட்ட நிலையில் உள்ள மாணவர்கள் தங்கள் உயர்நிலைக் கல்வியை எங்கே தொடருவது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தயக்கத்திலிருந்து திரும்பியுள்ளனர். வருங்கால மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிலையை சற்றே ஆராய்ந்து பார்த்தோமானால் அவர்கள் உண்மைத்தகவலின் அடிப்படையிலிருந்து முடிவை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

இப்பொழுதும் சிறந்தது

தொடக்கத்திலேயே கல்வியின் தகுதிகளைப் பற்றிய கவலைகளை விரட்டச் செய்துவிடுங்கள். இப்பொழுதும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் உலகிலேயே சிறந்ததாக இருக்கின்றன. அதிகமாகவும், பல்கலைக்கழகங்களில் உள்ள துடிப்பான கல்விசூழ்நிலையிலிருந்து மாணவர்களில் சிறந்தவர்களை வெளியே கொண்டுவரும் வேலையை அவை செய்கின்றன.

பல நாடுகள், தங்களிடம் இருப்பதிலேயே சிறந்த மூளைகளைத் தேர்ந்தெடுத்து உலகத் தரத்தை எதிர்கொள்ளும்வகையில், மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோமோ என்பதை தங்களைத் தாங்களே சீர்தூக்கிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் எவ்வகையிலும் பாகுபாட்டை ஆதரிக்கவில்லை. பல்கலைக்கழகங்கள் இப்பொழும் திறந்த கரங்களோடு உலக மாணவர்களை வரவேற்கத் தயாராக உள்ளன. அடிப்படையான காரணம், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய ஏன் இந்திய மாணவர்களுக்கு கடினமான நேரமாக இது இருக்கிறதென்றால், அந்தப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, மற்றும் அதிகரித்துவரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, போட்டியும் கடுமையாகி வருவது.

மூன்றாவதாக, அமெரிக்காவில் உயர்கல்விக்குப் பிறகான வேலைவாய்ப்பு சூழ்நிலைகளை நாம் கருத்தில் செய்யவேண்டும். நான் அமெரிக்க செல்ல விரும்பும் மாணவர்களை இரு வகையாக பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். அமெரிக்காவுக்கு படிப்பதற்கு மட்டும் செல்பவர்கள். அமெரிக்காவுக்கு படிப்பதற்குச் சென்று அங்கேயே வேலையைத் தேடிக்கொள்ளச் செல்பவர்கள். இந்த அளவுகோல் இருமுனை திசைகளை மிகக் கூர்மையாக வைத்துள்ளது.

பெரும்பான்மையான மாணவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை முன்னிட்டே தங்கள் உயர் கல்வியை அங்கு தொடர விரும்புகிறார்கள். இந்த வகையான மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் படிப்புக்கு அப்பால் தாங்கள் விரும்பும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு புள்ளியில், வேலை தரும் ஒரு கல்வியின்மீதும் ஒரு காதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியின்போதே படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் வேலை என்பது கவலைக்குரிய ஒன்றாகத்தான் இருந்தது. இப்பொழுதுகூட அந்த சூழ்நிலையில் எந்த மாற்றமுமில்லை. அமெரிக்காவில் தங்கள் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் அவர்தம் படிப்புக் காலத்திலேயே OPT எனப்படும் ஓர் ஆண்டுக்காலம் விருப்ப செயல் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இந்த பயிற்சி காலகட்டத்தில்தான் ஹெச்1பி எனப்படும் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கமுடியும்.

உயர்கல்வியை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் தொடர விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே 2 ஆண்டாக மேற்சொன்ன பயிற்சிக்காலம் நீட்டிக்கப்படுகிறது. சில மாணவர்கள், குறைந்தபட்ச 3 ஆண்டுக்காலம் ஒரு வேலைவாய்ப்பைப் பெற முடியும். ஹெச்1பி விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்வரை அதற்குமுன்னதாக ஆரம்பக்கட்ட நடைமுறைகளுக்காக தற்காலிகமாக 6 மாதகாலம் நீக்கிவைக்கப்படுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

ஏராளமான விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எந்தவகையிலாவது பிரச்சனை இருக்குமாயின் இந்த 6 மாதகால நீக்கம்செய்யும் அறிக்கையும் வழங்கப்படும். இந்த நடைமுறையை அச்சுறுத்தும் வகையிலாக பிரதிநிதிகள் சபை அல்லது சட்டசபையிடமும் முன்மொழியவும் அதை அவர்கள் பரிசீலனைக்கவும் எந்த சட்டவிதிகளும் இல்லை.

ட்ரம்ப்பின் அமெரிக்காவோடு, அமெரிக்கக் கல்வி இப்பொழுதும் அதன் தலைமையோடு பிணைந்திருக்கிறது. அதைப்போலவே அதன் இதயத்தோடு அனைத்துவிதமான நிற, இன, பாலின, ஓரின பாலியல், தேசியங்களோடும் பிணைந்திருக்கிறது. உலகளாவிய மாணவர் சமுதாயத்தைப் பாதிக்கும்வகையில் ட்ரம்ப் இன்னும் எதையும் முன்மொழியவில்லை. உங்களுக்கு அமெரிக்காவில் உயர்கல்வி பயில வேண்டும் எண்ணம் இருந்தால் நீங்கள் நிச்சயமாக அமெரிக்க நாட்டில் மூன்றாண்டுகள் தங்கிப் பயில்வதற்கான நல்ல வாய்ப்புகளை அமெரிக்காவில் கண்டறியமுடியும்.

டொனால்டு டிரம்ப் குடியேற்றங்களுக்கெதிரான கோபமாக சகிப்பின்மையின் வார்த்தைகளை கக்கும்போதெல்லாம், சுதந்திர தேவிச் சிலை பொருத்தப்பட்ட பீடத்தில் இவ்வாசகத்தை எப்போதும் வாசிக்கலாம், ''உன்னுடைய அயர்வு கொண்டவர்களுமான ஏழ்மையுமான, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேட்கை கொள்ளக் குழுமும் பெருந்திரள் மக்களை என்னிடம் கொடு, உனது கரையில் பெருகும் பரிதாபத்திற்குரிய, வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இவர்கள்! இத்தகைய வீடற்ற மற்றும் சூறைக்காற்றில் சுழற்றி வீசப்பட்டவர்களை என்னிடம் அனுப்பு, தங்கக்கதவுக்கு அருகே நான் இவர்களுக்காக விளக்கை உயர்த்துவேன்”

உலகின் எந்த மூலையிலும் சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சவாலை எதிர்கொள்ளும் வகையில் இந்திய மாணவர்களுக்கு இப்பொழுதும் தங்கக் கதவுகள் திறந்துதான் இருக்கின்றன.

கட்டுரையாசிரியர் நியூயார்க்கில் உள்ள ஆம்ப்ளிஃபை Centre for Early Reading கல்வி மையத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x