

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பயணிகளைக் கவர சென்னை விமான நிலையம் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை விழாக்காலம் மற்றும் விடுமுறைக் காலம் என்பதால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளைக் கவர விமான நிலைய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலைய வளாகம் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டுள்ளது.
விமான நிலையத்தின் புறப்பாட்டு வழி, வருகை வழி ஆகியவற்றின் முகப்பில் கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. விமான நிலையம் முழுக்க ஒளி அலங்காரங்கள் செய்யப்பட்டு, இனிமையான இசை ஒலிபரப்பப் படுகிறது. விமான நிலையத்துக்கு வரும் சிறுவர், சிறுமியர்களைக் கவரும் விதமாக பொம்மை கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. குழந் தைகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங் கப்படுகின்றன. இந்த விழாக்கால ஏற்பாடுகள் ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.