

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.
குறைந்த மின் அழுத்தத்தால் அவதி
கோவிலம்பாக்கம், சுசீலாநகர், முதல் தெருவில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மின் சாதனங்கள் பழுதாவதுடன், மின் விசிறி, மின் விளக்குகள் இயங்குவதில்லை. அதனால் வீட்டில் உள்ள அனைவரும் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எஸ்.சுந்தரவதனம், கோவிலம்பாக்கம்
வேகத்தடை அமைக்க வேண்டும்
பழைய பெருங்களத்தூர் பத்மாவதி திருமண மண்டபம் அருகில், முடிச்சூர் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் போக்குவரத்து இருந்து வருகிறது. வாகனங்களும் வேகமாக செல்கின்றன. சாலையை கடப்பது சிரமமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் விதமாக அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.மணிமாறன், முடிச்சூர்.
பழுதான லிப்டுகளால் நோயாளிகள் சிரமம்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 மாடி கட்டிடம் உள்ளது. அதில் 2 லிப்டுகள் நீண்ட காலமாக பழுதாகி கிடக்கின்றன. அவற்றை சரி செய்யாததால், நோயாளிகள், அவர்களை அழைத்துச் செல்வோர் மற்றும் அவர்களை பார்க்க வருவோர் நீண்ட வரிசையில் நின்று, அங்கு இயங்கும் ஒரே லிப்டில் மாடிக்கு சென்று வருகின்றனர். இதனால் அனைவரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அங்கு பழுதாகியுள்ள லிப்டுகளை உடனே சரி செய்ய வேண்டும்.
வி.வைத்தியநாதன், பள்ளிக்கரணை.
ஆக்கிரமிப்புகளால் விபத்து
வேளச்சேரி- தாம்பரம் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கவுரிவாக்கம் பகுதியில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. அதனால் அந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், கவுரிவாக்கம் பகுதியில் விபத்துக்குள்ளாகிறது. இப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துகளைத் தடுக்க, அங்குள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.ராமச்சந்திரன், கவுரிவாக்கம்.
மின் மாற்றி அமைக்கப்படுமா?
பழைய மகாபலிபுரம் சாலை, கந்தன்சாவடி அடுத்த கல்லுக்குட்டை கேபிகே நகர் பகுதியில் பல நாட்களாக குறைந்த மின் அழுத்தம் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் எந்த மின் சாதனமும் இயங்குவதில்லை. இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய மின் மாற்றியை அமைத்து, குறைந்த மின் அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பார்த்திபன், கல்லுக்குட்டை.
சிற்றுந்து இயக்க வேண்டும்
பெரம்பூர் பஸ் நிலையம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து திரு.வி.க. நகருக்குச் செல்ல இயக்கப்பட்டு வந்த பஸ், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரு.வி.க. நகருக்கு 2 பஸ்கள் மாறிச் செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக, வெளியூர்களில் இருந்து ரயில்கள் மூலம் வரும் பயணிகள் பெரம்பூர் சர்ச் அருகே வந்து பஸ் ஏற வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க வேண்டும்.
ஏ. ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.
பிராட்பேண்ட் இயங்கவில்லை
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தின் பிராட்பேண்ட் சரியாக இயங்குவதில்லை. கடந்த 10 நாட்களாக இதே நிலை நீடித்து வருகிறது. தொலைபேசி இணைப்பும் அடிக்கடி பழுதடைகிறது. இதுகுறித்து, பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
வி.அரவிந்தன், ஊத்துக்கோட்டை.
பஸ் நிறுத்தத்தின் இருக்கைகள் சேதம்
பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு அமர்வதற்கு பயணிகள் குறிப்பாக, கர்ப்பிணிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பஸ் நிறுத்தத்தில் சேதம் அடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
வாசகர், திரு.வி.க.நகர்.
அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |