Published : 15 Jun 2017 09:47 AM
Last Updated : 15 Jun 2017 09:47 AM

மின் இணைப்புக்கு தடைபோடும் செக் ஷன் - 17

‘இன்னும் ஓராண்டில் இந்தியா வில் மின் இணைப்பு இல்லாத வீடுகளே இருக்காது’ என்கிறது மத்திய அரசு. ஆனால், நீலகிரி மாவட் டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக் களைச் சேர்ந்த பத்தாயிரம் குடும் பங்களுக்கு மூன்று தலைமுறைகளாக மின் இணைப்பு வழங்க மறுத்து வருகிறது தமிழக அரசு.

‘செக் ஷன் - 17’

மொழிவாரி மாநில பிரிவினையின் போது கேரள எல்லைக்குள் இருந்த நீலம்பூர் கோயிலகம் நிலம் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் தமிழகத்துக்குள் வந்தது. இதில், 80 ஆயிரத்து 87 ஏக்கரை ’ஜென்மி ஒழிப்பு சட்டம் -1969’ மூலம் 1974-ல் தமிழக அரசு தன்வசப்படுத்தியது. இந்த நிலங்கள் செக் ஷன் - 17’ என்ற சட்டப் பிரிவின் கீழ் வனப்பகுதிகளாக அறிவிக்கப் பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கில் குடியிருப்புகளும், எஸ்டேட்டுகளும் இருந்தன. ’செக் ஷன் - 17’ பிரிவு சட்டத் தில் வரும் நிலங்களில் மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்துகொடுக்க மாட்டார்கள் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது நீதி மன்றம் சென்றனர்.

இறுதியாக இந்த விவகாரத்தில், ’செக் ஷன் - 17’ பிரிவுக்குள் வரும் நிலங் களை கையாள்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தர விட்டது நீதிமன்றம். ஆனாலும் இவ் விஷயத்தில் நடக்கும் உள்ளீடு அரசி யலால் எத்தகைய முடிவும் எடுக்கா மல் இழுக்கப்போட்டிருக்கிறது அரசு.

மூன்று தலைமுறையாக..

இதனால், தற்போது இந்த பகுதிகளில் மூன்றாவது தலைமுறையாக வசிக்கும் 10 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன. இங்கே இப்படி இருக்க.. அண்மையில் ஒரே சமயத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கிய கேரள அரசு, ’தங்கள் மாநிலத்தில் மின் இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை’ என்று பிரகடனம் செய்து அதற்காக விழாவும் எடுத்திருக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசினார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் என்.வாசு. ’’செக் ஷன் - 17’ பிரிவில் இங்குள்ள நிலங்கள் வகைப்படுத்தப்பட்ட பிறகும் மின்வாரியம் குறிப்பிட்ட காலம் வரை மின் இணைப்பு கொடுத்திருக்கிறது. வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரி கள் பிரச்சினை செய்ததாலேயே மின் இணைப்பு கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.

பரிதவிப்பில் பத்தாயிரம் வீடுகள்

இங்கு சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. மீதி உள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகளுக் குத்தான் இப்போது சிக்கல். மின்வசதி இல்லாததால் இந்த வீட்டுப் பிள்ளைகள் படிப்பில் பின்தங்கிப் போகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்தப்பகுதி களில் எழுபதுக்கும் மேற்பட்டவர் கள் யானைகள் உள்ளிட்ட காட்டுவிலங்கு களால் அடித்துக் கொல்லப்பட்டிருக் கிறார்கள். மின் வசதியும், தெருவிளக்குக ளும் இல்லாததே இதற்குக் காரணம்.

2004-ல் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்ததால் சில வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்தார்கள். பிறகு, ‘செக் ஷன் - 17’ மற்றும் ’செக் ஷன் - 53’ பிரிவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களில் ‘எம்பவர்டு கமிட்டி’ தடை யில்லா சான்று அளித்தால் மட்டுமே மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்துதரமுடியும் என அறிவித்து விட்டனர்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ’எம்பவர்டு கமிட்டி’க்கு ’செக் ஷன் - 17’ பிரிவில் வரும் நிலங்களை கண்காணிப்பது மட்டுமே வேலை. மின் இணைப்பு தருவதற்கு அவர்களின் சான்று தேவை என்பது மக்களை அலைக்கழிக்கும் செயல். இதற்காக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பிரயோஜனம் இல்லை.

இதனிடையே, 2006-ல் திமுக ஆட்சி யில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியபோது சிலருக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கினார்கள்.

ஒரே சமயத்தில் விண்ணப்பம்

இந்தச் சூழலில் தான், மின் இணைப்பு இல்லாத வர்களை எல்லாம் ஓருங்கிணைத்து கடந்த மாதம் ஒரே சமயத்தில் 3 ஆயிரத்து 647 பேரை கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புக்காக விண்ணப்பம் கொடுக்க வைத்தோம். மற்றவர்களிட மும் விண்ணப்பங்களை பெறுவதற்கு கிராமங்களில் முகாம்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் நகல் எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிட்டு இன்னொரு நகலை டெல்லி சென்று ’எம்பவர்டு கமிட்டி’யிடம் நேரில் அளிக்க இருக்கிறோம்’’ என்று சொன்னார் வாசு.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x