Last Updated : 30 Nov, 2013 08:31 PM

 

Published : 30 Nov 2013 08:31 PM
Last Updated : 30 Nov 2013 08:31 PM

கற்பனையூரும் சாகச சிறுவனும்

மனதை மிகவும் நெகிழவைக்கும் ஒரு நிகழ்வு சிறிது நாட்கள் முன் அமெரிக்காவில் நடந்தது. சான்பிரான்சிஸ்கோ நகரைச் சார்ந்த மைல்ஸ் ஸ்காட் எனும் 5 வயது சிறுவன். புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. அது காமிக் புத்தக ஹீரோவான ‘பாட்மான்’ உடன் ‘கோத்தம்’ நகரைக் காப்பது. அதை நிறைவேற்ற அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான மேக் எ விஷ் முயற்சிகளை எடுத்துக்கொண்டது.

மைல்ஸ் அன்று ‘பேட்மான்’ உடை அணிந்து நகர் முழுவதும் சில சாகசங்கள் அந்நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது. அதற்காக சேவகர்கள் பலர் தேவைப்பட்டனர். அந்நிறுவனம் தன் இணையத்தளத்தில் அதற்காக ஓர் அறிக்கையை விடுத்திருந்தது. 10,000க்கும் அதிகமானோர் பணம் ஏதும் இல்லாமல் தாமாக முன்வந்து இந்தக் கனவை மெய்யாக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வு நவம்பர் 15ஆம் தேதி நடந்தது.

நவம்பர் 15ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ ஒரு கற்பனை நகரானது. மைல்ஸ் ‘பேட் மான்’ உடை அணிந்த ஒரு நடிகருடன் ‘பேட் மொபைல்’ என்ற வாகனத்தில் சென்று சாகசங்களை நிகழ்த்தினான்.

இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களிம் பல்வேறு விதமாகப் பகிரப்பட்டது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வைட் ஹவுஸ்இன் ட்விட்டர் மூலம் மைல்ஸ்க்கு பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்டார் “சபாஷ், மைல்ஸ். அப்படித்தான் கோத்தம் நகரைக் காக்கவேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x