

திருவண்ணாமலையில் புராதன கிரிவலப் பாதையில், அவசர கால பாதை என்ற பெயரில் புதிய பாதை அமைப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்மீக உணர்வுகளைப் பாதிக் கின்ற வகையில் புதிய பாதை அமைக் காமல், இருக்கின்ற பாதையை மேம்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. பௌர்ணமி நாளில் சுமார் 5 லட்சம் பக்தர்களும், கார்த்திகை தீபம் நாளில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அவசர காலை பாதை என்ற பெயரில் கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கிரிவல நாட்களில் அவசர கால தேவைக்கு வாகனங்களை இயக்குவதற்காக பாதை விரிவாக் கம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான குழு கடந்த 17-ம் தேதி ஆய்வு செய்துள்ளது. விரிவாக்கம் செய்யும் பணியை பக்தர்கள் வரவேற்கின்றனர். அதே நேரத்தில், தொன்றுதொட்டு வரும் கிரிவலப் பாதையில், துளியும் மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். பக்தர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
‘‘அவசர கால பாதை என்ற பெயரில் கிரிவலப் பாதை விரிவாக் கம் செய்யப்படுகிறது. அடி அண்ணாமலை பகுதியில் விரிவாக் கம் செய்ய இடவசதி இல்லை என்று கூறி, வருண லிங்கம் அருகே புதிய பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாதை, ஆதி அண்ணாமலை கோயில் பின் திசை வழியாக வாயு லிங்கத்தை சென்றடைகிறது. புதிய பாதையில் கிரிவலம் வரும்போது, அண்ணாமலை தோன்றிய காலம் முதல் உள்ள ஆதி அண்ணாமலை கோயில் இடது பக்கமாக வருகிறது. கோயிலை வலது பக்கமாக வலம் வந்து வழிப்படுவதுதான் சிறப்பு. புராதன வழிபாட்டு முறைகளை மாற்றக்கூடாது.
மண் பாதையில் கிரிவலம் வர வேண்டும் என்பது மரபு. அதையும் மாற்றி தார்சாலை அமைத்துவிட்டார்கள். இப்போது, புராதன கிரிவலப் பாதையை மாற்றுகின்றனர். புதிய பாதை என்பது அதிகாரத்தில் உள்ளவர் கள், வாகனத்தில் கிரிவலம் செல்வதற்காக என்று கருதுகிறோம். புதிய பாதை அமைப்பதால் இயற்கை வளம் பாதிக்கக்கூடும். விவசாய நிலங்கள் அழிந்துபோகும். வன விலங்குகள் அழிந்துபோகும். கிரிவலத்தின் புனிதத் தன்மை கெட்டுவிடும் .
அவசர கால பாதைக்கு புதிய பாதை அமைப்பதால், கிரிவலத் தின் புனிதத்தன்மை பாதிக்குமா? இல்லையா என்பது குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்க வில்லை. இருக்கின்ற பாதையை மேம்படுத்தி கொடுக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கின்றனர் பக்தர்கள்.
திட்டம் இறுதி செய்யவில்லை
இது குறித்து திருவண்ணமலை ஆட்சியர் ஞானசேகரன் கூறுகையில், ‘‘சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம் மற்றும் இதர பௌர்ணமி தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. பக்தர்களின் நலன் கருதி அவசர கால பாதை திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அடி அண்ணாமலையில் சாலை யை விரிவாக்கம் செய்ய இட வசதி இல்லாத காரணத்தால் வருண லிங்கம் அருகே பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பாதை கிரிவல பாதை கிடை யாது. அது, அவசர கால பாதை தான். இத்திட்டம், ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இறுதி செய்ய வில்லை. பக்தர்களின் கருத்தும் கேட்கப்படும்’’ என்றார்.