Published : 30 Oct 2014 01:20 PM
Last Updated : 30 Oct 2014 01:20 PM

அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி

கருப்பு பணம் பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, மத்திய அரசின் உயர்ந்தபட்ச சட்ட அதிகாரி. உச்சநீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞரான முகுல் ரோத்கி, மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் கடந்த மே 28-ம் தேதி இப்பதவியில் நியமிக்கப்பட்டார். இவரது தந்தை ஆவாத் பிகாரி ரோத்கி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்.

முகுல் ரோத்கி மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்று, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் அலுவலகத்தில் ஜூனியராக பணியாற்றி யவர். கடந்த 2002 ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கு, போலி என்கவுன்ட்டர் உள்ளிட்ட வழக்குகளில் குஜராத் அரசுக்கு ஆதரவாக அவர் வாதாடியுள்ளார். அம்பானி சகோதரர்கள் இடையே நடந்த வழக்கில் அனில் அம்பானி சார்பில் ஆஜரானார். மேலும், 2ஜி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x