Last Updated : 17 Jun, 2015 10:33 AM

 

Published : 17 Jun 2015 10:33 AM
Last Updated : 17 Jun 2015 10:33 AM

யோகா என்னும் உலகம் - 3

யோகாசனம் நமக்குத் தருவது என்ன? - 3

சிகிச்சைக்கான யோகா என்பது என்ன? ‘ஹட யோகம்’ என்று யோகத்தில் ஒரு வகை உள்ளது. இதில் சிறிதளவு மாறுதல் செய்து பயன்படுத்துவதே யோகாசன சிகிச்சை. இப்படி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ அறிவும் தேவை. ஹட யோகத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி னால் பல்வேறு விதமான வலிகள், நோய்களுக்கும் நிவாரணம் கிடைக் கும். மருந்து, மாத்திரைகள் உட் கொள்வது, அறுவை சிகிச்சை போன்றவற்றைக்கூட தவிர்க்கலாம்.

யோகாசன சிகிச்சைக்கு 2 அம்சங்கள் முக்கியம். முதலாவது, அறிவியல்பூர்வமாக ஹட யோகத் தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்தது, வலி அல்லது நோய் உள்ளவர்கள் அதற்கு முழு தாக ஒத்துழைக்க வேண்டும்.

புகைபிடிப்பதால் நுரையீரல் கெட்டுப் போன நோயாளிக்கு வெறும் பிராணா யாமம் மட்டும் பலன் தந்துவிடுமா? முதலில் அவர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். அதுபோலத்தான் வலி அல்லது நோய் உள்ளவர்கள் தங்க ளுக்கு அதை ஏற்படுத்தும் அம்சங்களை விலக்க வேண்டும்.

பல நோய்கள், வலிகளுக்குக் காரணம் நம் வாழ்க்கை முறைதான். கழுத்து வலி உள்ளவர்கள் சரியான உயரம் (கனம்) கொண்ட தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். அதிக பாரம் தூக்கக் கூடாது. வேலை செய்யும்போது உட்காரும் விதம் முறையாக இருக்க வேண்டும். கூடவே சில யோகாசனங்களைச் சரியான முறையில் செய்தால் வலி நீங்கிவிடும்.

ஹட யோகத்தை முறையாகப் பயிலாமல், பயிற்சி செய்யா மல் மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதும், தானே பயன்படுத்து வதும் பலன் தராது.

யோகாசனங்களைத் தூய வடிவில் அதன் முழுமையான நிலையில் செய்வது தான் நல்லது. ஆனால் நோயாளிகளுக்கு இது பொருந்தாது. அவர்களுக்குச் சில மாறுதல்களைச் செய்ய வேண்டும். ஆசன நிலைகளின் கடுமைகளைக் குறைக்க வேண்டும். நோயாளிகள் ஆசனங் களைச் செய்யும்போது உடல் ஆடாமலும் சரிந்து விழாமலும் இருக்கத் தலை யணை போல சில சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். இதில் பி.கே.எஸ்.ஐயங்கார் முன்னோடி. 1960-களில் அவர் இதைக் கையாண்டார். அவரைப் பின்பற்றி யோகாசனத்துக்கு உதவும் சிறு சாதனங்கள் பல புழக்கத்துக்கு வந்துள்ளன.

சாதனங்களின் பலன் என்ன?

1. வலியில் இருந்து நிவாரண மும், துல்லியமான சிகிச்சையும் கிடைக்கும்.

2. நம்மால் ஆசனங்களைச் செய்ய முடியும் என்ற தன்னம் பிக்கை நோயாளிக்கு ஏற்படும்.

3. போதிய பலனைத் தரும் அளவுக்கு, போதுமான நேரம் ஆசனத்தில் இருக்க உதவும்.

4. முதியவர்களால் ஆசனங் களைக் குறிப்பிட்ட நேரம்வரை தொடர்ந்து செய்ய முடியும்.

பாரம்பரிய யோகாசனம்

அப்படியானால் தூய அல்லது பாரம்பரிய யோகாசனம் என்பது என்ன? வலி இல்லாமல் வாழ் வதற்கான வழிமுறைதான் யோகா சனம். உடல் வலியில் இருந்து ஆன்மா விடுபட வேண்டும் என்ப தற்காக உருவானதுதான் ஹட யோகம். ஹட யோகத்தில் பல இருக்கலாம். ஆனால் நோயுற்ற வர்கள் பின்பற்ற வேண்டியது ஒரே வகையிலானதுதான். அது உடல் அமைப்புக்கும் உள்ளிருக் கும் உறுப்புகளுக்கும் ஊறு செய்யாதது. சரியான யோகாசன முறை எது என்று ஒலியலைச் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

யோகாசனம் என்பது பலரும் நினைப்பதுபோல இந்து மதம் சார்ந் தது அல்ல. அதற்கு எந்த மதமும் கிடையாது. எளிய பயிற்சிகள் மூலம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன் றையும் கட்டுப்படுத்தி உள்ளிருக் கும் ‘படைத்தவருடன்’ தொடர்பை ஏற்படுத்துவதுதான் யோகா.

யோகாசனம் செய்யும்போது மந்திரங்களை உச்சரிப்பதற்கும் ஆசனத்துக்கும் தொடர்பு இல்லை. யோகாசனம் என்பது அமைதியை அனுபவிப்பது. யோகாசனம் செய்வ தால் உடல், மனம், ஆன்மா மூன்றும் அமைதியடைய வேண்டும். ஆசனங்களால் உடல் அமைதி யடையும். மூச்சுப் பயிற்சியானது மூளை, இதயம், சுவாச மண்டலத் துக்கு அமைதியைத் தரும். ஆசன மும் பிராணாயாமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.

நமது உடல் நிலைக்கு ஏற்ப சரியான யோகாசனப் பயிற்சிகளைச் செய்துவந்தால் ஆரோக்கியம் உத்தரவாதம்.

(தமிழில்: சாரி)

டாக்டர் கிருஷ்ணா ராமன் தொடர்புக்கு:mediyoga@gmail.com

MBBS, FCCP பட்டம் பெற்றவர். பி.கே.எஸ்.ஐயங்காரிடம் யோகாசனங்களைக் கற்றவர். யோகாசன சிகிச்சை முறையை அறிவியல்பூர்வமாக செய்துவரு கிறார். ‘கிருஷ்ண யோகம்’ என்ற அமைப்பின் மூலம் சிகிச்சை யோகாவை சென்னையில் பயிற்று விக்கிறார்.

- நாளையும் யோகம் வரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x