திருவள்ளுவர் பல்கலை.க்கு யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து: இனி மத்திய அரசு நிதி உதவி கிடைக்கும்

திருவள்ளுவர் பல்கலை.க்கு யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து: இனி மத்திய அரசு நிதி உதவி கிடைக்கும்
Updated on
1 min read

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து வழங்கியுள்ளது. 12-பி அந்தஸ்து பெற்றதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு இனிமேல் யு.ஜி.சி. மற்றும் மத்திய அரசு துறைகளின் நிதியுதவி தாராளமாக கிடைக்கும்.

யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து

தமிழ்நாட்டில் கலை அறிவியல் படிப்புகள் தொடர்பான 12 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகம், தேவையான பேராசிரி யர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஆராய்ச்சிப்பணிகள் உள்பட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) 12-பி அந்த ஸ்தை வழங்குகிறது. யு.ஜி.சி. குழுவினர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே இந்த அந்தஸ்தை அளிப்பார்கள்.

ஒரு பல்கலைக்கழகம் 12-பி அந்தஸ்து பெற்றால் மட்டுமே அதற்கு யு.ஜி.சி. நிதி மற்றும மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து கட்டமைப்பு வசதிகளுக்கோ அல்லது ஆய்வு பணிகளுக்கோ நிதி உதவியை பெற இயலும்.

திருவள்ளுவர் பல்கலைக் கழகம்

தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு வேலூரில் திருவள்ளு வர் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது. வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 12-பி அந்தஸ்து பெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், யு.ஜி.சி. நிர்ணயித்திருந்த அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்த நிலையில், 12-பி அந்தஸ்து வேண்டி இப்பல்கலைக்கழகம் யு.ஜி.சி.க்கு விண்ணப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து யு.ஜி.சி. குழு அண்மையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து ஆய்வுசெய்தனர். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துக்கு 12-பி அந்தஸ்தை யு.ஜி.சி வழங்கியது.

மத்திய அரசு நிதி கிடைக்கும்

12-பி அந்தஸ்து பெற்றிருப்பதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு யு.ஜி.சி. நிதி மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைப்புகளிடமிருந்து நிதி உதவி தாராளமாக கிடைக்கும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் இன்னும் யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in