ஸ்ரீரங்கம் கோயில் யானைப் பாகனுக்கு மீண்டும் பணி

ஸ்ரீரங்கம் கோயில் யானைப் பாகனுக்கு மீண்டும் பணி
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் கோயில் யானைப் பாகனுக்கு மீண்டும் வேலை வழங்க அறங்காவலர் குழுத் தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயி லில் யானைப் பாகனாக 27 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்தேன். கோயில் யானை ஆண் டாளை நல்ல முறையில் பரா மரித்து வந்தேன். பாகன் பணியைத் தவிர, வேறு வேலை தெரியாது. பாகனாக பணிபுரிந்து பாகனாகவே இறக்க விரும்புகிறேன். இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பாகன் பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தேன்.

பின்னர், அக்கடிதத்தை திரும்பப் பெற்று பணியில் சேர்ந்தேன். இதற்கிடையே, நான் ஏற்கெனவே கொடுத்த கடிதத் தின் அடிப்படையில், என்னை பணியிலிருந்து விடுவித்து கோயில் இணை ஆணையர் 2014 செப். 23-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

உத்தரவு

இந்த மனுவை விசாரித்து நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவில் ‘ஆண்டாள் யானை இருக்கும்வரை பாகன் பணியில் தொடர விரும்புவதாக மனுதாரர் நேரில் ஆஜராகி தெரிவித்தார். தற்போது மனுதாரரின் மனு அறங்காவலர் குழுவின் முன் உள்ளது. பாகனின் ஏழ்மை நிலையை கருணையுடன் பரிசீலித்து மீண்டும் அவரை பணியில் சேர்க்க அறங்காவலர் குழுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in