1960-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

1960-களில் பாரத  ரத்னா விருது பெற்றவர்கள்
Updated on
1 min read

1961- விதான் சந்திர ராய்

(1882 ஜூலை 1 – 1962 ஜூலை 1).

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். மேற்கு வங்கத்தின் 2-வது முதல்வர். மருத்துவரான இவரது பிறந்த நாள் (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1961- புருஷோத்தம் தாஸ் தாண்டன்

(1882 ஆகஸ்ட் 1 – 1962 ஜூலை 1)

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். இந்தி ஆட்சி மொழி அந்தஸ்து பெறுவதற்கு பின்புலமாகச் செயல்பட்ட அவரை வடஇந்திய மக்கள் “ராஜரிஷி” என்று அழைக்கின்றனர்.

1962- ராஜேந்திர பிரசாத்

(1884 டிசம்பர் 3 – 1963 பிப்ரவரி 28)

நாட்டின் முதல் குடியரசுத் தலைவர். வழக்கறிஞர், பத்திரிகையாளர், அரசியல் தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

1963- பாண்டுரங்க வாமன் காணே

(1880- 1972)

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர். சாகித்ய அகாதெமி உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

1963- ஜாகீர் உசேன்

(1897 பிப்ரவரி 8 – 1969 மே 3)

நாட்டின் 3-வது குடியரசுத் தலைவர், முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த நிறுவன தலைவர்களில் ஒருவர்.

1966- லால் பகதூர் சாஸ்திரி

( 1904 அக்டோபர் 2 – 1966 ஜனவரி 11)

நாட்டின் 2-வது பிரதமர். அவரது மறைவுக்குப் பின்னர் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது ஆட்சியில் 1965 பாகிஸ்தான் போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in