மாற்றுத்திறனாளி உரிமை சட்டத்துக்கு பிரகாஷ் காரத் ஆதரவு

மாற்றுத்திறனாளி உரிமை சட்டத்துக்கு பிரகாஷ் காரத் ஆதரவு
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை நிறைவேற்ற மார்க்ஸ் சிஸ்ட் கட்சி ஒத்துழைப்பு தரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து ஊனமுற் றோருக்கான தேசிய மேடையின் செயலாளர் முரளீதரன், ஊனமுற் றோர் உரிமைகள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜாவேத் ஆபிதீ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை இடைக்கால பட்ஜெட் ஒப்புதலுக்காக கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு ஒத்துழைப்பு கேட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினோம்.

இச்சட்டத்தை வடிவமைக்கும் பணி, 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இன்னமும் இயற்றப்படவில்லை. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது மிக அவசியம் என்று அவரிடம் எடுத்துக் கூறினோம்.

அதைக் கேட்ட பிரகாஷ் காரத், நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி இச்சட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதியளித்தார். இதேபோல் மற்ற கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in