Published : 23 Nov 2013 09:20 AM
Last Updated : 23 Nov 2013 09:20 AM

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - கட்சிகள் மவுனம்.. தொண்டர்கள் குழப்பம்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முக்கிய கட்சிகளின் தலைமை இன்னும் அறிவிக்காததால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு அதிமுக சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி பி.சரோஜாவும், திமுக சார்பில் வெ.மாறனும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். மற்ற முக்கியக் கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில் அதிமுக., திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தை கள், திராவிடர் கழகம் ஆதரவு அளித்துள்ளன. திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் கருணாநிதி ஒரு மாதம் முன்பே கடிதம் எழுதியிருந்தார். பெரும்பாலான கட்சிகள் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக தரப்பில் இருந்தும் திமுகவுக்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

மேலிடம் முடிவுக்காக..

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலை

வர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, திமுக தலைவரின் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் கூறினார். “யாருக்கு ஆதரவு என்பதை காங்கிரஸ் மேலிடம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறி விக்கும்” என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். அதே போல பாஜக தரப்பிலும் இதுவரை உறுதியான தகவல் வரவில்லை.

தொண்டர்கள் குழப்பம்

ஏற்காடு தொகுதியில் வரும் 2-ம் தேதி மாலை பிரச்சாரம் முடிவடைகிறது. இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸும், பாஜகவும் எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருப்பது, திமுகவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களும் எந்தக் கட்சிக்கு தேர்தல் பணியாற்றுவது, எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

தேசியக் கட்சிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள முக்கியக் கட்சிகளும் மவுனம் சாதித்து வருகின்றன. முக்கியக் கட்சியான தேமுதிக, ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று கடைசி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சி தேர்தலில் போட்டி யிடாததுடன், ஆதரவு யாருக்கு என்பதையும் அறிவிக்கவில்லை. மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் நிலையை தெரிவிக்கவில்லை. அதனால் அந்தக் கட்சிகளின் தொண்டர் களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் நடக்க வுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக ஏற்காடு இடைத்தேர்தலை அதிமுகவும், திமுகவும் கருதுகின்றன. தேர்தல் கூட்டணிக்கும் இது ஒரு அச்சாரமாக கருதப்படுகிறது.

அதிமுகவையோ, திமுகவையோ வெளிப்படையாக ஆதரித்தால், அது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பாதகமாகிவிடுமோ என்பதால்தான் தேமுதிக உள்பட எல்லா கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன.

அரசியல் தந்திரத்துடன் இடைத்தேர்தலில் மவுனம் சாதிக்கின்றன. இந்தக் கட்சிகளின் மவுனம், மறைமுகமாக ஏற்காடு இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாகவே இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x