

“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூரை தொடர்ந்து திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் வாசகர்களில் ஒருவராக கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீன்குமார் பேசியதாவது:
எங்கள் கல்லூரி நூலகத்தில் “தி இந்து” கிடைக்காமல் இருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்களாகிய நாங்கள் எடுத்துரைத்தோம். “தி இந்து” தரமாகவும், சமூக சிந்தனையுடனும் வெளிவருவதால் அப்பத்திரிகையை நூலகத்திலும், கல்லூரியிலும் நிர்வாகம் வாங்கி வருகிறது. இது “தி இந்து”வுக்கு கிடைத்த வெற்றியாகும். “தி இந்து” நடுப்பக்கத்தை தொகுத்து வைத்திருக்கிறேன். வருடந்தோறும் இதுபோன்ற விழாவை நடத்த வேண்டும் என்றார் அவர்.