Published : 15 Sep 2018 05:15 PM
Last Updated : 15 Sep 2018 05:15 PM

ஆங்கிலம் ஒரு நோய்; இந்தி இன்றி நாட்டில் வளர்ச்சி இல்லை: வெங்கையா நாயுடு பரபரப்பு பேச்சு

இந்தி மொழி இன்றி நாட்டில் வளர்ச்சி ஏற்படாது, ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற மொழி ஆங்கிலம் ஒரு நோய் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

டெல்லியில் உள்துறை அமைச்சகம் சார்பில் தேசிய இந்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடுமுழுவதும் மக்கள் தொடக்க கல்வியை அவரவர் தாய் மொழியில் தான் கற்க வேண்டும். எனினும் நாட்டின் பெரும்பாலான மக்கள் பேசும் இந்தி மொழியை அனைவரும் கற்பது அவசியம். இந்தி மொழி இன்றி நாட்டின் முன்னேற்றம் இல்லை. இந்தி ஒற்றுமையின் சின்னம். அதேசமயம் ஆங்கிலம் ஒரு நோய், அது ஆங்கிலேயர் இந்த நாட்டின் விட்டுச்சென்ற மொழி அது.

எனது இளமை பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் பிற்காலத்தில் அந்த தவற்றை எண்ணி வருந்தினேன். டெல்லி வந்து அனைவரிடமும் இந்தியில் பேசும் போது தான் மற்றவர்களுடன் சமமாக உணர்ந்தேன்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x