

திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவு கிரிமினல் குற்றமல்ல; பெண் கள் ஒன்றும் கணவனின் உடமை யல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 497-ன்படி, ஒருவர் திருமண பந்தத்தைத் தாண்டி வேறு ஒரு வரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது குற்ற மாக கருதப்படும். இதற்கு அதிக பட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக் கப்படும் என்று சட்டத்தில் கூறப் பட்டுள்ளது. இதை எதிர்த்து ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:
‘தகாத உறவு’ சட்டப்படி குற்றம் என்பது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பழங் கால சட்டம். இப்பிரிவு பெண் களின் சுதந்திரத்திலும் அடிப்படை உரிமையிலும் தலையிடுவதாக உள்ளது. பெண்களை ஆண்கள் தங் களின் உடமைப் பொருள் போல நடத்த வழிவகை செய்கிறது. பெண் களின் கண்ணியம், சுயமரியா தைக்கு பங்கம் விளைவிக்கிறது.
நாட்டின் அரசியல் சாசனத்தில் அனைவரும் சமமாக, சுதந்திரமாக வாழ வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. கணவன் என்பவர் பெண்களின் எஜமான் அல்ல. பெண்களின் அடிப் படை உரிமைக்கும் சுதந்திரத்துக் கும் எதிராக உள்ள எந்த சட்டமும் அரசியலமைப்புக்கு எதிரானதே. எனவே, பிரிவு 497 ரத்து செய்யப் படுகிறது. அதேபோல, திருணத் துக்கு எதிரான குற்றம் என்று கருதப் படும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 198(2)-ம் ரத்து செய்யப்படுகிறது.
அதேசமயம், சிவில் சட்டப்படி தகாத உறவு தவறானதாகவே கருதப்படும். திருமணத்தை ரத்து செய்யவோ, விவகாரத்து கோரவோ ‘தகாத உறவு’ ஒரு காரணமாகக் கருதப்படும். மேலும், இத்தகைய உறவால் பாதிக்கப்பட்ட ஆணோ, பெண்ணோ தற்கொலை செய்து கொண்டால், தற்கொலையை தூண்டியதாக கணவன் அல்லது மனைவி மீது வழக்கு தொடரப் படும். இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மனுதாரர்
இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் ஜோசப் ஷைன், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். இத்தாலியில் பணி புரியும் இவர், இந்திய கலாச்சாரம், சட்டம், பெண் உரிமை, சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த வழக்கைத் தொடர்ந்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.