ஊரு ஊரா போய் சுவைக்காம ஒரே கிளிக்ல சுவைக்கலாம் வாங்க ! ! ! . . .

ஊரு ஊரா போய் சுவைக்காம ஒரே கிளிக்ல சுவைக்கலாம் வாங்க ! ! ! . . .

Published on

தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு.

சாத்தூரில் கரகர மொறுமொறு சேவு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, மணப்பாறையில் முறுக்கு, கோவில்பட்டியில் சுவையான கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம் என ஊரின் பெயரோடு தாங்கி தின்பண்டங்கள் விற்பனையாகின்றன .

ருசிப்பிரியர்களை குஷி படுத்தவே தொடங்கப்பட்டுள்ளதுதான் நமது www.tredyfoods.com எனும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர். உங்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை இந்த இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்யலாம்.

திருநெல்வேலி அல்வா: 

நீங்க எல்லாரும் இந்த திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு இருப்பீங்கன்னு நம்புறோம்.

நல்ல தரமான சம்பா கோதுமையை எடுத்து, ஒரு 8 மணி நேரம் பதமா ஊறவைச்சு, பக்குவமா ஆட்டு உரல்ல போட்டு ஆட்டுனோமுன்னா, கோதுமைப்பால் பொங்கி வரும். அந்த கோதுமைப் பாலை வாணலியில் போட்டு கொதிக்க வைக்கணும், பின் சர்க்கரைப் போட்டு விடாம கிண்டிகிட்டே இருந்தால் அல்வா சிவப்பு நிறமா வரும், அப்போ தேவையான அளவு நெய் சேர்த்து கிளறி, வறுத்த முந்திரியை மழைச் சாரலா தூவி விட்டோம்னா, எலேய் திருநெல்வேலி அல்வா ரெடி லேய்!

ரெடி டு குக் மசாலா:

இன்றைய அவசர வாழ்க்கையில், உணவை சமைப்பதற்க்கு ஆகும் நேரத்தில் அதிக நேரம் அதற்க்கான மசாலாக்களை தயாரிக்கவே செலவாகும். வறுப்பது, தாளிப்பது, அறைப்பது போன்ற உங்கள் சமையலின் இத்யாதி இத்யாதி வேலைகளை சுலபமாக்க tredyfoods.com , ரெடி டு குக் மசாலாகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சமே வெங்காயம், தக்காளி, மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பட்டை, க்ராம்பு, சீரகம், மிளகு போன்ற தேவையான அனைத்து உட்பொருட்களும் சமையலுக்கு தயாரான நிலையில் (Readymade) , கலவையாக, சரியான விகத்தில் உள்ளது. பொடி போலில்லாமல் (Semi-Solid) திடதிரவமாக இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பேச்சிலர்கள், பணிக்கு செல்பவர்களின் சுமையை குறைக்கவேரெடி டு குக் மசாலாக்கள்www.tredyfoods.comல் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெடி டு குக் செட்டிநாடு மசாலா, ரெடி டு குக் பெப்பர் மசாலா, ரெடி டு குக் கடாய் மசாலா என சுவையான மசாலாக்களை வாங்கி சமைக்கலாம். சிக்கன், மட்டன், காளான், காலிஃப்ளவர், காய்கறிகளைக் கொண்டு விதம் விதமாக சமைக்கலாம்.

இடித்த நிலக்கடலை உருண்டை:

நாம் சாப்பிடும் உணவு சக்கையாக இருக்கக் கூடாது சத்தானதாக இருக்க வேண்டும். அந்த வகையில்" நிலக்கடலையில் இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளது. இதன் சுவை அலாதியானது. 

நம் குழந்தைகளுக்கு " Junk Food " களை தவிர்த்து நம் பாரம்பரிய உணவு முறையின் ஒரு அங்கமான இதுபோன்ற நிலக்கடலை உருண்டை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் அவர்களது அரோக்கியம் மேம்படும். எனவே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்ற அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாகும். 

கோவா நெய் ஜாமூன் 

'கோவா நெய் ஜாமூன்' அலாதியான சுவை கொண்ட தின்பண்டம். சாதாரண குளோப் ஜாமூனைப் போல இல்லாமல் சாப்பிட சாப்பிட திகட்டாமல் இருக்கிறது இந்த ஹோம் மேட் கோவா நெய் ஜாமூன்.

முதல்தரமான கோவா, நெய், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். பண்டிகைக் காலங்களில் இந்த பலகாரத்தை ஆர்டர் செய்து சாப்பிடலாம். எங்கிருந்தாலும் உறவினர்களுக்கும் ஆர்டர் செய்து இனிப்பு அதிர்ச்சி அளிக்கலாம்.

உற்சாகம் தரும் மூலிகை சூப்

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரும் மூலிகை சூப் வகைகள்: சமீபத்திய விழிப்புணர்வு காரணமாக மக்கள் இயற்கை உணவுப்பொருட்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரனமாக கடந்து வந்த பிரண்டை, கண்டங்கத்திரி, குப்பை மேனி, கரிசலாங்க கன்னி, வாதநாராயணி, தூதுவளை, பொன்னாங்கன்னி.

வல்லாரை, ஆவாரம்பூ, முடக்கத்தான், முருங்கை, புதினா மற்றும் கருவேப்பில்லை ஆகிய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் ஏராளம். சளி, காய்ச்சல், மூட்டு வலி மற்றும் உடல் வலி ஆகியவற்றுக்கு அம்மாவும் பாட்டியும் தந்த அருமருந்து மூலிகை சூப் மற்றும் கஷாயங்கள் ஆகும்.

இவை அனைத்தையும் எங்கே தேடி அலைவது என்ற கவலை வேண்டாம். மேல குறிப்பிடப்பட்ட அணைத்து மூலிகைகளும் சூப் பொடியாக www.tredyfoods.com இல் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் தேவையான சூப் வகைகள் கிடைக்கும்.

மேலும் * நொறுக்கு தீனிகள், * இனிப்புகள், * கேக் வகைகள், * ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ், * ஊறுகாய் வகைகள், * ஆர்கானிக் தின்பண்டங்கள், * அப்பளம், * பொடி வகைகள், * ரெடிமேட் சூப், * சட்னி வகைகள், * வீட்டில் தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள், * மலைவாழைப்பழம், * தேன் வகைகள், * ஆட்டுக்கால் கிழங்கு என 800க்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் www.tredyfoods.comல் உள்ளது.

இந்தியாவின் எந்த ஊரில் இருந்து ஆர்டர் செய்தாலும் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு தங்கள் இல்லம் வந்தடைகிறது. CASH ON DELIVERY, இந்தியா முழுவதும் இலவச Shipping வசதி உள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்.

ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் நீங்களே www.tredyfoods.com பத்தி பெருமையா சொல்வீங்க...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in