Published : 20 Dec 2018 08:06 AM
Last Updated : 20 Dec 2018 08:06 AM

விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் வெற்றி

இந்திய ராணுவத்தின் தகவல் தொடர் புக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. தகவல் தொடர்பு, வானிலை, புவி ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்காக அதிநவீன செயற் கைக்கோள்களையும் அவற்றை விண் ணில் செலுத்துவதற்கான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களையும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து வருகிறது.

ராணுவ பயன்பாடு

அந்த வகையில், இந்திய எல்லைப் பகுதியில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உட்பட ராணுவ பயன்பாட்டுக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. இதன் எடை 2,250 கிலோ ஆகும். இந்த செயற் கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்து வதற்கான இறுதிக்கட்ட பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வந்தன.

ராக்கெட்டை குறித்த நேரத்தில் விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் செயல்பாட்டுக்கு ராக்கெட் ஏவும் திட்ட தயாரிப்புக் குழுவும் அதற்கு அதிகாரம் அளிக்கும் குழுவும் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கின. அதைத் தொடர்ந்து, ராக் கெட்டை விண்ணில் செலுத்துவதற் கான 26 மணி நேர கவுன்ட் டவுன் அன்றைய தினம் பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

இதையடுத்து திட்டமிட்டபடி சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள், நேற்று மாலை சரியாக 4.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றி கரமாக செலுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன், சக விஞ்ஞானி களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விஞ்ஞானிகள் கரகோஷம் எழுப்பியும் ஒருவருக் கொருவர் கைகுலுக்கியும் வாழ்த்து களை பரிமாறிக் கொண்டனர்.

நிலைநிறுத்தம்

ராக்கெட் தரையில் இருந்து புறப் பட்ட அடுத்த 4 நிமிடம் 37 விநாடிகளில் முதல் இரண்டு நிலைகள் (திட, திரவ எரிபொருள்) எரிந்து பிரிந்தன. இறுதி நிலையில் ராக்கெட்டில் இருந்த கிரையோஜெனிக் இன்ஜின் செயற்கைக்கோளை 19-வது நிமிடம் 21-வது நொடியில் பூமிக்கு அருகே 170 கி.மீட்டர் தொலைவிலும், புவி சுற்று வட்டப்பாதையில் 33,190 கி.மீ. தொலைவிலும் நிலைநிறுத்தியது. பின்னர் இந்த செயற்கைகோளானது படிப்படியாக 40,600 கி.மீ. துாரத்தில் நிலைநிறுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் போர்க் காலங்களில் விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிய முடியும். மேலும், தகவல் தொடர்பு சேவைக்கும் வான்வெளி தாக்குதலுக் கும் இது பெரிதும் பயனுள்ளதாக இருக் கும். இந்திய எல்லைப் பகுதிகளை டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமாக கண்காணிப் பதற்கும் இந்த செயற்கைக்கோள் உறுதுணையாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

இது இஸ்ரோவின் 39-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இதை விண்ணில் செலுத்திய ராக்கெட், ஜிஎஸ்எல்வி வரிசையில் 13-வது ராக்கெட் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x