Last Updated : 20 Dec, 2018 11:15 AM

 

Published : 20 Dec 2018 11:15 AM
Last Updated : 20 Dec 2018 11:15 AM

சிதையும் உறவுகள்; சிதறும் குடும்ப கட்டமைப்புகள் - பெற்றோரால் கொல்லப்படும் குழந்தைகள்

சமூகத்தில் உறவுகள் சிதைவதும், குடும்பக் கட்டமைப்புகள் சிதறுவதும் தொடர்கதையாகும் சூழலில், பெற்றோரால் கொல்லப்படும் குழந்தைகளைப் பாதுகாக்க வழியில்லையா? என்ற ஆதங்கம் எல்லோர்  மனதிலும் எழவே செய்கிறது.

குழந்தைகளுக்காக கடுமையாய் உழைக்கும் பெற்றோர் மத்தியில், அவர்களை கவனிக்காமல் கேட்பாரற்றநிலைக்கு விடும் பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர். அதேபோல, பிள்ளை வரம்வேண்டி தவம் கிடக்கும் பெற்றோர் மத்தியில், குழந்தைகளைக்  கொல்லும் கொடூர பெற்றோரும் இச்சமூகத்தில் உள்ளனர்.

கூட்டுக் குடும்பக் கட்டமைப்பு, தனிக் குடும்பமாக சிதறி, கணவன்-மனைவி  உறவுகள் சிதைவதே முக்கிய காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கொலை வழக்குகள்

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா (21), நான்கு வயது குழந்தை ஹரிவாசா. 2016 ஜூன் மாதம், தனது கூடா நட்புக்கு இடையூறாக இருந்ததாக ஹரிவாசாவை கழுத்தை இறுக்கிக்  கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சரவணம்பட்டி சிவானந்தாபுரத்தைச்

சேர்ந்தவர்  கார்த்திக்(26). இவரது மனைவி வனிதா(22). கடந்த ஆகஸ்ட் மாதம், தனது 2-வது குழந்தை, மூன்று மாத கவிஸ்ரீயை கொலை செய்துவிட்டு, நாடகமாடினார் வனிதா. இதற்கும் காரணம் கூடா நடப்பு. போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய வனிதா, தற்போது சிறையில்.

மசக்காளிபாளையம் நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (45).  இவரது மனைவி செல்வராணி(38). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மதுபோதையில் மகள்கள் ஹேமவர்ஷினி(15), ஸ்ரீஜா(8) ஆகியோரைக் கொன்ற வழக்கில் கைதான பத்மநாபன், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கு இவர்களது மனநிலை மாறியது எப்படி?

இயலாமையின் வெளிப்பாடு

மசக்காளிபாளையம் இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கை புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் பி.ஆனந்த் கூறியதாவது: பெற்ற குழந்தைகளையே பெற்றோர் கொலை செய்வது இயலாமையின் வெளிப்பாடு. இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவரிடம் இயலாமை மனப்பக்குவத்தையே காணமுடிந்தது.

மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டவர். குழந்தைகளை வளர்ப்பதிலும், பணி செய்வதிலும் கவனம் செலுத்த முடியாமல், மதுவுக்கு அடிமையாகி யுள்ளார். குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். குழந்தைகள் இறந்ததும், தற்கொலை செய்துகொள்ளும் முடிவிலிருந்து பத்மநாபன் பின்வாங்கி விட்டார்.

குழந்தைகளைப் பாதுகாப்பது முதல், அவர்களைப் படிக்கவைத்து ஆளாக்குவது வரை உதவ அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி, அந்த திட்ட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து, இத்தகைய  முடிவுகள் எடுப்பதை, பெற்றோர் தவிர்க்க  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

பத்மநாபன் - வனிதா

 

ஸ்ரீஜா - ஹேம வர்ஷினி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x