Published : 26 Dec 2018 10:31 AM
Last Updated : 26 Dec 2018 10:31 AM
வளர்ச்சி அடைந்த நாடுகளில் செயல்பாட்டில் உள்ள வாரிசு வரி மூலம், அங்குள்ள மருத்து வமனைகள், பல்கலைக்கழகங் களுக்கு அதிக நிதி கிடைப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி எய்ம்ஸ் மருத்து வமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறிய தாவது
இயலாத நிலையில் இருக்கும் ஒரு நபரின் சொத்துகளை, அவரின் வாரிசுகள் எடுத்துக்கொள்ளும் போது வாரிசு வரி விதிக்கப்படு கிறது. இந்த வரியை வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் விதிக்கின்றன. இந்த வரி மூலம், அந் நாடுகளில் உள்ள பல்கலைக்கழங் கள், மருத்துவமனைகளுக்கு அதி களவில் நிதி கிடைக்கின்றன.
இந்தியாவிலும் இந்த வரி நடைமுறையில் இருந்தது. ஆனால், இந்த வரி 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசால் நீக்கப் பட்டு விட்டது. இதனால், இங்குள்ள பல்கலைக்கழகங்கள், மருத்து வமனைகளுக்கு போதிய நிதி கிடைக்காத நிலை உள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலைக் கழங்கள், மருத்துவமனைகளுக்கு மத அமைப்புகளிலிருந்தும், கார்ப் பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டங் களின் (சிஎஸ்ஆர்) மூலமாகத்தான் கிடைக்கின்றன.
வெளிநாடுகளில் மருத்துவ மனைகள், கல்வி நிலையங்களில் படித்து உயர்ந்த நிலையில் இருக்கின்றவர்களால் உருவாக்கப் பட்ட அறக்கட்டளைகள் இருக்கின் றன. இவற்றின் மூலமாக மருத்து வமனைகள், கல்வி நிலையங் களுக்கு தேவையான நிதி கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள சில ஐஐடிகளுக்கு இது போன்ற அறக்கட்டளைகள் மூலம் நிதி கிடைக்கிறது. இருந்த போதிலும் இத்திட்டம் இன்னும் விரிவாக சென்றடையவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் உள்ள பல மருத்துவமனை களுக்கு, அம் மருத்துவமனை களால் பயன் அடைந்தவர்கள் கோடிக்கணக்கில் நிதி வழங்கியுள் ளனர்.
ஆனால், இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை இல்லை. இதற்கு அந்த நாடுகளில் வாரிசு வரி செயல்பாட்டில் இருப்பதால், அங்கு வசிக்கும் வயதானவர்கள் அறக்கட்டளைகளுக்கு அதிகள வில் நிதி அளிக்கின்றனர். இங்கு வாரிசு வரி நடைமுறையில் இல்லாத காரணத்தால் அறக்கட்டளைக ளுக்கு இது போன்று நிதி கிடைப் பதில்லை. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் சமூக அறக் கட்டளைகளை சார்ந்துதான் இருக் கின்றன. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மதம், குறிப்பிட்ட சமூக மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்படுகின் றன. நாட்டில் உள்ள சமூகத் துறைக்கு அந்த குறிப்பிட்ட சமூகத் தினர் மூலமாகத்தான் நிதி உதவி கிடைக்கிறது. தற்போது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள் ளோம். இதன் மூலமாக கடந்த 4 ஆண்டுகளாக நிதி கிடைக்கிறது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT