

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உ.பி.யை சேர்ந்த அப்னா தளம் (எஸ்) இடம்பெற்றுள்ளது. இக்கட்சியை சேர்ந்த அனுப்ரியா படேல், சுகாதாரத் துறை இணை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் அப்னா தளம் (எஸ்) கட்சியின் தேசியத் தலை வரும் அனுப்ரியாவின் கணவரு மான ஆசிஷ் படேல் கடந்த செவ்வாய்க்கிழமை கூறும்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சி களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ம.பி., ராஜஸ் தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில் ஏற்பட்டுள்ள தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்க வேண்டும்” என்றார்.
இதற்கு மறுநாள் உ.பியின் தியோரியாவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன் பங்கேற்க விருந்த நிகழ்ச்சி ஒன்றை அனுப்ரியா தவிர்த்தார்.
இந்நிலையில் அவர் நேற்று கூறும்போது, “எங்கள் கட்சியின் கருத்தை கட்சியின் தலைவர் ஏற்கெனவே கூறிவிட்டார். அந்தக் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்” என்றார்.
இதற்குமுன் உ.பி.யில் அனுப்ரியாவுக்கு யோகி அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாக்களுக்கு அனுப்ரியா அழைக்கப்படவில்லை எனவும் ஆசிஷ் படேல் குற்றம் சாட்டினார்.