Published : 22 Nov 2018 11:06 AM
Last Updated : 22 Nov 2018 11:06 AM
தஞ்சாவூர்/ திருவாரூர்
கஜா புயல் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் 6-வது நாளாக மக்கள் தவித்தனர்.
புயல் தாக்கிச் சென்ற 6-வது நாளான நேற்றும் குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட் களை மக்களுக்கு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால், ஆங்காங்கே மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலை யில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்ற ழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
ஊரகச் சாலைகளில் விழுந்த பெரும்பாலான மரங்கள், மின்கம் பங்கள் இன்னும் அகற்றப்படாத தால், நிவாரணப் பொருட்களை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சென்று சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் தாக்கியதன் காரண மாக கடந்த 16-ம் தேதி முதல் திருவா ரூர் மாவட்டத்தில் மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 மின்கம்பங்கள் நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் புயலில் விழுந்து உடைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை உள் பட மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது.
தமிழகம் முழுவதிலுலிமிருந்து வரவழைக்கப்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் சீரமைப்பு பணிக ளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை யில் கிராமங்களில் மின் விநியோ கம் இல்லாமல் குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான தண் ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதை சமாளிப்பதற்காக திருவா ரூர் மாவட்டத்துக்கு அரசு சார்பில் 122 ஜெனரேட்டர்கள் வரவழைக்கப் பட்டு கிராமங்களில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றும் பணிகள் நடைபெறு கின்றன. மேலும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகம் நடை பெற்று வருகிறது. இருப்பினும் கிராமப்புறங்களில் டேங்கர் லாரி கள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறியபோது, "டேங் கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோ கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தாலும், பல்வேறு கிராமங்களில் சாலைகள் மிகக் குறுகியதாக உள்ளதால் டேங்கர் லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஏற்படும் தண் ணீர் தட்டுப்பாடு காரணமாகவே ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
எனவே, டேங்கர் லாரிகள் செல்ல முடியாத இடங்களில் மினி ஆட் டோக்களை பயன்படுத்தி டேங்கு களை அதில் ஏற்றி, குடிநீர் விநியோ கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் கொடுத்து டேங்குகளில் தண்ணீர் ஏற்றி கொடுக்க அரை மணி நேரத்துக்கு ரூ.1000 வரை பணம் வசூல் செய்கின்றனர். இதனையும் தடுக்க வேண்டும் என்றார்.
இது ஒருபுறமிருக்க, நகர்ப் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது சொந்த ஏற்பாட்டில் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து கொடுத்து குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஓரள வுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT