Last Updated : 11 Oct, 2018 08:13 AM

 

Published : 11 Oct 2018 08:13 AM
Last Updated : 11 Oct 2018 08:13 AM

ரஃபேல் விமான ஒப்பந்த நடைமுறைகளை சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை வரும் 29-ம் தேதிக்குள் சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக் கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய விமானப் படைக்கு 36 அதிநவீன ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, மேலும் சிலர் உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசுக்கு எதிராக பொதுநல மனுக்களை தாக் கல் செய்துள்ளனர்.

எம்.எல்.சர்மா தனது மனு வில், “ரஃபேல் போர் விமா னங்களை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித் துள்ள அறிக்கையில், ஒரு ரஃபேல் ரக விமானத்தின் விலை 71 மில்லியன் யூரோ (ரூ.606 கோடி) என்று கூறப்பட் டுள்ளது. இந்த விலை விவ ரம் சர்வதேச சந்தையில் வெளிப்படையாக பட்டிய லிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள ஒரு விமானத்தின் விலை 206 மில்லியன் யூரோ (ரூ.1758 கோடி) என்று தெரிகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்

மற்ற சில மனுக்களில், ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ரஃபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண் டும், விலை நிர்ணயத்தில் ஊழல் நடந்துள்ளதால் முந் தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் விலையை யும் இப்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் விலை விவரங்களையும் ஒப் பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இம்மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசியல் ஆதாயம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டதாவது:

இந்த வழக்கு பொதுநல வழக்கு என்ற பட்டியலில் வராது. ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் வெளியில் கூறிவரும் குற்றச்சாட்டின் ஒரு பகுதியாக, அரசியல் ஆதாயம் தேட தொடரப்பட்டுள்ள வழக்கு இது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டால் கூட, அந்த நோட்டீஸ் பிரத மர் நரேந்திர மோடிக்குச் செல்லும்.

ரஃபேல் ஒப்பந்தம் தேசப் பாதுகாப்பு தொடர்பானது. எனவே, அட்டர்னி ஜெனர லான எனக்கே இதுகுறித்த விவரங்கள் கிடைக்காது. இது குறித்து நாடாளுமன்றத்தில் 40 கேள்விகள் கேட்கப்பட் டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளிடையே யான ஒப்பந்தமும் அடங்கி யுள்ளது. சர்வதேச ஒப்பந்தங் களில் பொதுவாக நீதிமன்றம் தலையிடுவதில்லை என்ற மரபும் பின்பற்றப்பட்டு வரு கிறது. மத்திய அரசின் ரஃபேல் ஒப்பந்த முடிவு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது அல்ல. எனவே, இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு கே.கே.வேணு கோபால் வாதிட்டார்.

நீதிமன்ற திருப்திக்காக..

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த முடிவு எடுக்கப்பட்ட நடை முறைகளை சீல் வைக்கப்பட்ட உறையில் வரும் 29-ம் தேதிக் குள் மத்திய அரசு சமர்ப் பிக்க வேண்டும். இதை அதிகாரப்பூர்வ நோட்டீஸ் என்று கருதக்கூடாது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விதத்தை நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதில் விலை விவரம், ரஃபேல் குறித்த தொழில்நுட்ப விவரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனுக்கள் மீது முடிவெடுக்கும் முன்பு நீதிமன்றம் திருப்தி அடைவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படு கிறது. இவ்வாறு கூறினர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணை வரும் 31-ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x