

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல ராகப் பணியாற்றும் தந்தையின் தலைமை அதிகாரியாக ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள மகன் பணி யாற்றுகிறார். திரைப்படக்காட்சி போல் தன் அதிகாரி மகனுக்கு அன்றாடம் சல்யூட் அடித்து நெகிழ் கிறார் தந்தை.
உ.பி.யின் தலைநகரான லக்னோவின் விபூதிகண்ட் காவல் நிலையத்தில் காவலராகப் பணி யாற்றி வருபவர் ஜனார்தன் சிங். நகர எல்லையில் வரும் அக்காவல் நிலையத்தின் தலைமை கண் காணிப்பாளராக அனுப் குமார் சிங் அமர்த்தப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான அனுப், காவலர் ஜனார்தனின் மகன் ஆவார். இத னால், இருவரது உறவு வீட்டிலும், வெளியில் பணியிலும் திரைப்படங் களில் வரும் காட்சிகளை போன்று எதிரும், புதிருமாக நிகழ்ந்து வருகிறது.
அன்றாடம் காலையில் பணிக்கு செல்லும் முன் அனுப், தன் தந்தை ஜனார்தனின் கால்களை தொட்டு வணங்கி விட்டுக் கிளம்புகிறார். அதேசமயம், வீட்டிற்கு வெளியே பணிக்கு வந்தவுடன் அன்றாடம் காவல்நிலையப் பகுதியில் மகன் அனுப்பை காணும் தந்தை ஜனார்த னின் செயல்பாடுகள் திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் நிஜமாக உள்ளது.இதில், மகன் அனுப்பை தனது உயர் அதிகாரியாக மட்டுமே பார்க்கிறார் தந்தை ஜனார்தன். இதனால், அவருக்கு அன்றாடம் மிடுக்குடன் ஒரு சல்யூட் அடித்து நெகிழ்கிறார். இந்த காட்சியை லக்னோவில் பார்ப்பவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காவலரான ஜனார்தன் சிங் கூறும்போது, “அவர் எனக்கு வீட்டில்தான் மகன். வெளியில் எனது மதிப்புமிகு உயர் அதிகாரி. எனவே, எனக்கு இதுவரை உயர் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு நான் அடித்ததை போலவே இவருக்கும் சல்யூட் அடிக்கிறேன். எனினும், இதுவரை இல்லாத வகை யில் இந்த சல்யூட் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும், பெருமையை யும் தருகிறது.
பாராபங்கியை சேர்ந்த காவலர் ஜனார்தனின் குடும்பம் மிகவும் கடின உழைப்புடன் முன்னேறி உள்ளது. அன்றாடம் அனுப் தனது மிதிவண்டியில் தன் சகோதரியை பள்ளியில் விடுவதை கடமையாகச் செய்துள்ளார். அதன் பிறகு தனது பள்ளிக்கு சென்று படித்த அவர், கடுமையான உழைப் பால் டெல்லியின் ஜவஹர்லால் மத்திய பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் பட்டமேற் படிப்பு முடித்தார். இங்கு கிடைத்த கல்விச் சூழல், அனுப்பை 2014 ஆம் ஆண்டின் உ.பி. மாநிலப் பிரிவின் ஐபிஎஸ் அதிகாரியாக பணியமர்த்தி உள்ளது. இதில், அனுப்பிற்கு முதன்முறையாக தனது காவலர் தந்தையின் உயர் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இது குறித்து அனுப் குமார் கூறும்போது, “பல வருடங்களுக்கு பின் நாங்கள் அனைவரும் ஒரே வீட்டினுள் வாழும் வாய்ப்பு கிடைத் துள்ளது. இங்கு நானும் எனது தந்தையும் உணவை குடும்பத்தா ருடன் ஒன்றாக அமர்ந்து உண்பது வழக்கம். ஆனால், அலுவலகம் வந்து விட்டால் அதிகாரி, காவலர் என்பதை தவிர எந்த உறவும் பார்ப் பதில்லை. ஆனால், காவலாக இருக் கும் தந்தைதான் எனது வாழ்வின் முன்மாதிரியாக இருப்பவர்’ என்றார்.
ஒவ்வொரு முறை இவர்கள் இருவரின் சந்திப்பின் போது தந்தை ஜனார்தன் தன் மகன் அனுப் குமாருக்கு அடிக்கும் சல்யூட்டை காண பலரும் நின்று ரசித்து விட்டுச் செல்வது வாடிக்கையாகி விட்டது.