Last Updated : 17 Jun, 2018 10:34 AM

 

Published : 17 Jun 2018 10:34 AM
Last Updated : 17 Jun 2018 10:34 AM

கனடா இலக்கியத் தோட்ட விருதுகள்

மிழ் வளர்ப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ‘இயல் விருது’ எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2001-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. முதல் இயல் விருது சுந்தர ராமசாமிக்கு வழங்கப்பட்டது. பின்னாட்களில் புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, தமிழ் கணிமை என வெவ்வேறு வகைமைகளில் விருதுகள் வழங்கி தமிழ் ஆளுமைகளைக் கௌரவித்துக்கொண்டிருக்கிறது.

2017-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது, வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 2 கடிதத் தொகுப்புகள், ஒரு நாவல் என வண்ணதாசனின் 50 ஆண்டுகால இலக்கியப் பங்களிப்புகள் இவை. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அன்பின் விதைகளை முளைவிடச்செய்யும் வல்லமை வண்ணதாசனின் எழுத்துகளுக்கு உண்டு. அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘அந்தரப் பூ’வும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவலுக்காக புனைவுக்கான விருது தமிழ்மகனுக்கும், ‘கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்’ ஆய்வு நூலுக்காக அபுனைவுக்கான விருது இ.பாலசுந்தரத்துக்கும், ‘அம்மை’ கவிதைத் தொகுப்புக்காக பா.அகிலனுக்கும், ‘பாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும்’ நூலுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது டி.ஐ.அரவிந்தனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

- த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x