

அமெரிக்காவில் வாழும் இந்திய கணிதவியலாளர்கள் இருவருக்கு, அத்துறையைச் சார்ந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. இதில், கணிதவியலின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் அத்துறையின் பதக்கம் (Fields Medal) மஞ்ஜுல் பார்காவா என்பவருக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்தியரான சுபாஷ் கோட் என்பவருக்கு சர்வதேச கணிதவியல் சங்கம் சார்பாக ரால்ஃப் நேவன்லின்னா பரிசு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா, தென் கொரியாவின் சியோல் நகரத்திலுள்ள சர்வதேச கணிதவியலாளர்கள் கூட்டத்தில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவில், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் பார்கவா உள்ளிட்ட நான்கு பேருக்கு துறை சார்ந்த பதக்கம் (Fields Medal) வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான துறை சார்ந்த பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் முதல் பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழத்தின் பேராசிரியருமான மரியம் மிர்ஸாகானி.
இரு இந்தியர்களின் கணிதச் சிறப்பு
வடிவியலில் (Geometry) உள்ள எண்களில் உருவாக்குவதில் புதிய முறையை கண்டறிந்ததன் காரணமாக, பார்கவாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருது வழங்கிய குழு, “எண்ணியலில் ஆழ்ந்த புரிதலைக் குறிக்கும் விதமாகவும், இயற்கணிதவியலிலும், பகுப்பாராய்விலும் சிறந்து விளங்கும் உழைப்பாக உள்ளது பார்கவாவின் வேலை”, என்று தெரிவிக்கின்றது.
வித்தியாசமான கணித விளையாட்டில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, அதற்கான வரையறையை முன்னரே உருவாக்கி இருப்பதற்காக சுபாஷ் கோட்டாவுக்கு ரால்ஃப் நேவன்லின்னா பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர் கணிதவியலின் படிமுறையில் (Algorithmic design) புதிய வடிவத்தை கண்டறிந்தார். மேலும், வடிவியல், பகுப்பாராய்வியல், கணினி சார்ந்த சிக்கல்கள் ஆகியவற்றில் புதிய உள்வினையை (interaction) உருவாக்கியிருப்பது இவரின் கணிதவியலின் சிறப்பு. இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: ஷோபனா