

சமூகத் தொடர்புகளில் முழுமையான நேர்மையை எதிர்பார்ப்பவரா நீங்கள்?
ஆம் எனில், நீங்கள் சமூகத் தொடர்புகளில் சுமுகமான முறையில் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவே என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகமும், மெக்சிகோ பல்கலைகழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், மிகவும் நேர்மையான சமூகத் தொடர்பு நமது நட்பு வட்டத்தைக் குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நேர்மையற்ற ஒரு சமூக வட்டத்தில் நாம் இருப்பின், அது மிக மோசமான வட்டாரத்தை உருவாக்கும் என்று கூறும் இந்த ஆய்வு, சமூகச் செயல்பாடுகளில் இடைநிலையாக இருப்பதுதான் உகந்தது என்று தெரிவிக்கின்றது.
இதுகுறித்து சமூக உளவியலாளர்கள் கூறுகையில் நாம் பயன்படுத்தும் நான்கு விதமான பொய்கள் குறித்து விளக்குகின்றனர்.
மற்றவரின் நன்மைக்காகப் பொய் கூறுவது, தனது சொந்த நன்மைக்காகப் பொய் கூறுவது, சமூக நலனுக்கு எதிராகப் பொய் கூறுவது, மற்றவரை காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் பொய் கூறுவது என்று நான்கு வகையான பொய்கள் உள்ளன என்று அவர்கள் குறிப்பிடுக்கின்றனர். இதில், முதலில் குறிப்பிடப்பட்டுள்ள பொய்யை தவிர்த்து, மற்ற அனைத்தும் சமுதாய நலனுக்கு எதிரானது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், சமூகத் தொடர்புகளை நிலையாக வைத்திருப்பதற்கான வழிமுறைகளை இந்த ஆய்வு கூறுகின்றது.
வெள்ளை பொய்கள் என்று அழைக்கப்படும் சமூக நலன் சார்ந்த பொய்கள், உங்கள் தொடர்புகளை நிலையாக வைத்துக்கொள்ள உதவும். இது தொடர்பாக, 1000 அமெரிக்கக் குடிமக்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஓர் ஆண்டிற்கு ஒருவர் 550 பொய்கள் கூறுகின்றார். அதாவது, ஒரு நாளுக்கு ஒருவர் 1.65 பொய்கள் கூறுகின்றார் ன்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பாதி பொய்கள் வெறும் 5% பேர்களால் கூறப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி ஆராய்ந்தால், சமூக தொடர்புகளை நிலைநிறுத்தவது மிக சிறிய கூட்டம்தான் என்பதை நம்ப முடிகிறதா?
ஆகையால், அடுத்த முறை நீங்கள் உண்மையை மட்டும் பேசவேண்டும் என்று நினைத்தால், மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்துவிட்டுப் பேசுங்கள். ஏனெனில், பேசிய வார்த்தைகளை திரும்ப பெறுவது இயலாத காரியம்!
தமிழில்: எம்.ஆர்.ஷோபனா