Last Updated : 15 Feb, 2018 10:17 AM

 

Published : 15 Feb 2018 10:17 AM
Last Updated : 15 Feb 2018 10:17 AM

பார்வையற்றோரின் தொலைநோக்குப் பார்வை

 

உலகிலேயே முதன்முறையாக சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கென தொடங்கப்பட்ட அரிமா சங்கம் கோல்டன் விஷன் லயன்ஸ் கிளப்.

‘என்ன செய்யப்போகிறது இந்த லயன்ஸ் கிளப்’ என்ற கேள்வியோடு சென்னை கொரட்டூர் பக்தவத்சலம் கல்லூரி பேராசிரியர் ராஜா இச்சங்கத்தின் முதல் தலைவர். அவரைக் கேட்டோம். “எங்களுக்கு பார்வைதான் இல்லையே தவிர, தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பலர் சேவை செய்கின்றனர். நாங்களும் நல்லது செய்ய வேண்டும். அதை மிகப்பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருக்கிறது” என்கிறார் நம்பிக்கையுடன்.

சென்னையில் உள்ள கோல்டன் ரோஸ் லயன்ஸ் கிளப் தலைவி வசுமதி, செயலாளர் பத்மாவதி ஆனந்த் ஆகியோர் இந்த அரிமா சங்கம் தொடங்க காரணமாக இருந்தவர்கள். அவர்கள் கூறும்போது, “உயர்கல்வி முடித்து அரசு மற்றும் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர், தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை லயன்ஸ் கிளப்புக்கு வழங்கி தங்களைப் போன்றவர்களுக்கு உதவும்படி கோரினர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால், உலகிலேயே முதன்முறையாக அவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் கோல்டன் விஷன் லயன்ஸ் கிளப்” என்றனர்.

தற்போதைய தலைவர் பி.நாகராஜன், செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கிலப் பாட ஆசிரியர். செயலாளர் ஆர்.புருஷோத்தமன், சென்னைப் பள்ளி வரலாற்றுப் பாட ஆசிரியர், பொருளாளர் பாரதிராஜா, கடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர்.

இந்த கிளப்புக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதில் உள்ள 13 பேர், ஆண்டு சந்தாவாக ரூ.6 ஆயிரமும் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக செலவிடுகின்றனர். மற்றவர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் உயர வேண்டும் என வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x