தடுமாறும் தெ.ஆப்பிரிக்கா: அடுத்தடுத்து விக்கெட் சரிவு

தடுமாறும் தெ.ஆப்பிரிக்கா: அடுத்தடுத்து விக்கெட் சரிவு
Updated on
1 min read

செஞ்சூரியனில் நடந்து வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. புதிய கேப்டன் மார்கிரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் டூப்பிளசிஸ்க்கு பதிலாக ஜான்டோ, ஷம்சி ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

ஹசிம் அம்லா, குயின்டன் டீ காக்  ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தாங்கள் சந்தித்த முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன்வேகத்தை கூட்டினர். ஓவருக்கு 4 ரன்கள் வீதத்தில் சீராக தென் ஆப்பிரிக்கா சென்றது.

இந்நிலையில், புவனேஷ்குமார் வீசிய 9-வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அம்லா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 39 ரன்களுக்கு முதல் விக்கெட்டை தென் ஆப்பிரிக்கா இழந்தது. அடுத்ததாக கேப்டன் மார்கிரம் களமிறங்கினார்.

இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் டீ காக் 20 ரன் சேர்த்திருந்த போது, பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்துஆட்டமிழந்தார். 51-ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது.

அதன்பின் 13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீச வந்தார். இந்த ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா. குல்தீப் வீசிய முதல் பந்தில், கேப்டன் மார்கிரம் 8 ரன்களைச் சேர்ந்திருந்த போது புவனேஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த டேவிட் மில்லர் அதே ஓவரின் 5-வது பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் முறையில் வெளியேறினார். இதனால் 51ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தெ ஆப்பிரிக்கா தடுமாறி வருகிறது. 17 ஓவர்கள் முடிவில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in