Published : 09 Feb 2018 10:16 AM
Last Updated : 09 Feb 2018 10:16 AM

குப்புசாமியின் புத்தக வீடு

வீ

ட்டையே நூலகமாக மாற்றி இருகிறார் சேலத்தைச் சேர்ந்த குப்புசாமி.

சமையல் அறை, படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் அடுக்கப்பட்டிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு மத்தியில்தான் இவரது வாழ்க்கை. நம்மிடம் கூறும்போது, “எனது 11 வயசில் தமிழாசிரியரால் புத்தகப் பிரியனாக மாறிவிட்டேன். வீட்டின் அனைத்து அறைகளும் இப்போது நூலகமாக மாறிவிட்டன. வள்ளலார் உரை, திருக்குறள்தான் தன்னம்பிக்கையை ஊட்டின” என்கிறார். 

வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலருக்கும் புத்தகங்களை கொடுக்கிறார். ஆத்தூர் நூலகத்துக்கு 700 புத்தகங்களை கொடுத்திருக்கிறார். மேலும் வாசிப் பால் படைப்பாளியாகவும் உயர்ந்திருக்கிறார். திருக்குறள் தத்துவ யோகஞான உரை, வள்ளலார் அருளிய மகாதேவ மாலை உரை விளக்கம் உள்ளிட்ட 11 நூல்களை எழுதி இருக்கும் குப்புசாமி, வாசிப்பை எப்போதும் கைவிடக்கூடாது என வலியுறுத்துகிறார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x