Last Updated : 31 Jan, 2018 11:13 AM

 

Published : 31 Jan 2018 11:13 AM
Last Updated : 31 Jan 2018 11:13 AM

வள்ளுவரே இறை!

ள்ளியில் படித்து முடித்தகையோடு திருக்குறளையும் ஏறக்குறைய நாம் முடித்து விடுகிறோம். திருவள்ளுவத்தை வாழ்க்கை முச்சூடும் தொடரவும் அதன் நெறியின்படி நடக்கவும் வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தொடங்கியதுதான் திருவள்ளுவர் ஞான மன்றம். திருவள்ளுவரை கடவுளாக வணங்கி தொழ வேண்டும் என்கிறார் இந்த மன்றத்தை உருவாக்கிய ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் சி.பன்னீர்செல்வம்.

பல கிராமங்களுக்குச் சென்று திருக்குறளையும் அதற்கான பொருளையும் விளக்குவதுடன், தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகள் அமையக் காரணமாக இருந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களையும் 4 மண்டலமாக பிரித்து, அந்தந்த மண்டலங்களில் உள்ள திருவள்ளுவர் அமைப்புகள், மன்றங்களை ஒருங்கிணைத்து மாநாடு ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.

“வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல பல கருத்துகளைத் தந்த திருவள்ளுவரை நம் தமிழ்ச் சமூகத்தின் தலைவர் என்பதற்கும் மேலாக கடவுளாகத்தான் பார்க்க வேண்டும். கேரளாவில் தேயிலைத் தோட்ட தொழிலாளி சிவானந்தர், திருவள்ளுவருக்கு சிலை அமைத்து வணங்கி வருகிறார். இதேபோல், தமிழகத்திலும் வழிபட வேண்டும். அவரது கருத்துகள் பரவ வேண்டும்” என்கிறார் பன்னீர்செல்வம்.

திருவள்ளுவர் புடைப்புச் சிற்பத்துடன் கூடிய விளக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் திருவள்ளுவர் படம், குறள் பொறித்த டைல்ஸ்கள், வாகனங்களில் ஒட்டும் ஸ்டிக்கர்கள் என காணும் இடமெல்லாம் திருவள்ளுவர் என்கிற இலக்கை நோக்கி செயல்படுகிறார் பன்னீர் செல்வம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x