Last Updated : 02 Dec, 2017 03:14 PM

 

Published : 02 Dec 2017 03:14 PM
Last Updated : 02 Dec 2017 03:14 PM

அஷ்ட லிங்கங்கள்... ஆஸ்ரமங்கள்... அஷ்ட நந்திகள்!

திருவண்ணாலை எனும் புண்ணிய பூமியில்... பார்க்கும் இடமெல்லாம் புண்ணியங்கள்தான்; புனிதங்கள்தான்! ஜோதி வடிவில் தன்னைக் கண்ட அம்பிகை, மலையை வலம் வந்ததும் ஈசன் மகிழ்ந்தான். தனது இட பாகத்தையே அவளுக்கு அளித்தான். அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தருளினான். எனவே, திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது சிவனையே வலம் வருவதாகக் கருதப்படுகிறது.

பார்வதிதேவியும் அவளது பரிவாரங்களும் தொடங்கி வைத்த மலையைச் சுற்றும் வழக்கம், அதன்பிறகு பல சித்தர்கள், ஞானிகளால் பின்பற்றப்பட்டது. இன்றைக்கும் அவர்கள் சூட்சுமரீதியாகக் கிரிவலம் வருகிறார்கள் என்பதாக ஐதீகம்!

சிவராத்திரி, வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, பௌர்ணமி, கார்த்திகை மாதம் போன்ற காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வருகிறார்கள்.

மலையைச் சுற்றி அஷ்ட லிங்கங்கள், அஷ்ட நந்திகள், புனிதத் தீர்த்தங்கள், அழகிய மண்டபங்கள், பகவான் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், பகவான் ரமணாஸ்ரமம், பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் உள்ளிட்ட இன்னும் பல ஆஸ்ரமங்களும் உள்ளன.

சித்தர்கள் பலர் வாழ்ந்த, வாழ்கின்ற மலை அண்ணாமலை.

அண்ணாலையானே போற்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x