Published : 05 Dec 2017 11:09 am

Updated : 05 Dec 2017 11:09 am

 

Published : 05 Dec 2017 11:09 AM
Last Updated : 05 Dec 2017 11:09 AM

சின்னத்திரையோரம்: பெரிய திருப்பம்

பெரிய திருப்பம்

வி

ஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘சின்னத்தம்பி’. வீரனாகவும், பெண்களை மதிப்பவனாகவும் வெகுளி கலந்த கிராமத்துப் பையனாகவும் ஊரில் வலம் வருகிறார் சின்னத்தம்பி. அந்த ஊர் பெண்களுக்கு அவர்தான் கனவு நாயகன். மற்றொரு பக்கம், பணக்கார மாடர்ன் சிட்டி பெண்ணாக நாயகி நந்தினி வருகிறார். ஆனால் நல்ல மனம் படைத்தவர்.

இருவரது முதல் சந்திப்பு கசப்பாக அமைந்தது. ஆனால் விதியின் வழியால் இருவரும் 2-வது முறையாக சந்திக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு, சின்னத்தம்பியின் நடை, உடை, பாவனை மீது நந்தினிக்கு இனம்புரியாத வெறுப்பு ஏற்படுகிறது. இதனால், முதலிரவையே தவிர்க்கவும் நினைக்கிறார். இதை தெரிந்துகொள்கிற சின்னத்தம்பியின் அப்பா, தன் மகனின் கெட்டப்பையே முற்றிலுமாக மாற்றத் திட்டமிடுகிறார். மீசை, தாடி, வேட்டி, துண்டு என பக்கா கிராமத்து இளைஞனாக வரும் சின்னத்தம்பி அடியோடு மாறுவதுதான் இந்த வாரக் கதை. இதன் பிறகு, சின்னத்தம்பி மீது நந்தினிக்கு காதல் வருகிறதா? என்கிற திருப்பத்தோடு கதை நகரும்.

‘காதலிக்க நேரமில்லை’ தொடரில் நடித்த ப்ரஜன், இதில் சின்னத்தம்பியாக நடிக்கிறார். ‘ரெட்டை வால் குருவி’ தொடரில் நடித்த பவானி ரெட்டி, நந்தினியாக நடிக்கிறார். தொடரை அருள் ராசன் இயக்குகிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2

டனத்தில் தனித்த திறமையாளர்களை அடையாளம் காட்டும் விதமாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ சீசன் 2 கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதில் நடுவர்களாக கவுதமி, சினேகா ஆகியோருடன் இம்முறை நடிகை பிரியாமணி இணைந்துள்ளார்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் நடந்த நேர்காணலில் 12 ஜோடிகள் தேர்வாகி இந்த முறை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளனர். அவர்களோடு ஜீ தமிழ் நிகழ்ச்சி நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்களும் களத்தில் இறங்குகிறார்கள். சிறந்த நடன ஜோடிகளைத் தேர்வு செய்யும் விதமாக முதல் 20 சுற்றுகளை படு விறுவிறுப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். சின்னத்திரை கலைஞர்களின் பங்களிப்பு நகைச்சுவையும், சுவாரசியமும் கலந்த விதமாக இருக்குமாறு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. தீபக் தொகுத்து வழங்குகிறார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author