Published : 19 Dec 2017 10:36 AM
Last Updated : 19 Dec 2017 10:36 AM

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி

வே

.ஸ்ரீராம் சர்மா வடிவமைத்து இயக்கிய வீரமங்கை வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தை தனது திரைக்கதை வசனத்தில் திரைப்படமாக எடுக்கிறார் வைகோ. இந்நிலையில் பள்ளி மாணவர்களைக் கொண்டே பள்ளி மாணவர்கள் மத்தியில் வேலுநாச்சியார் வரலாற்றை விதைக்கப் புறப்பட்டிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. அதற்கு இவர் சூட்டியிருக்கும் பெயர் ‘பள்ளித் தலம் அனைத்தும் வேலு நாச்சியார்!’

இப்போது பல பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதும், நமது மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத அந்நிய நாடகங்களை அரங்கேற்றுவதுமே நிகழ்கிறது. ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு இவ்வளவு மெனக்கெடும் மாணவர்கள், விழா முடிந்தவுடன் அதனை மறந்துவிடுகிறார்கள். காரணம், அவர்கள் பங்கெடுத்துக் கொண்ட விஷயம் இந்த மண்ணுக்குச் சம்பந்த மில்லாத ஏதோ ஒன்று என்பதுதான்.

இதை கடுமையாகச் சாடும் ஸ்ரீராம் சர்மா, “மாணவப் பருவம் என்பது மிகவும் செழிப்பான அற்புதமான வரம். அந்தப் பருவத்தில் நாம் எதை அவனது மனதில் விதைக்கிறோமோ அதுதான் அவனது எதிர்கால வாழ்க்கையில் வீரியமாய் முளைக்கும்.

ஆபாசத்தை நாமே அங்கீகரிக்கிறோம்

சினிமாவும் தொலைக்காட்சியும் பெண் என்பவள் வெறும் போகப் பொருள் மட்டுமே என்ற விஷ வித்தை நம் பிள்ளைகளின் ஆழ்மனத்தில் விதைத்து வைத்திருக்கின்றன. பள்ளி ஆண்டு விழாக்களில், ‘ஏம் பேரு மீனாக்குமாரி’ என்று நம் பிள்ளைகள் அருவருக்கும் உடல் அசைவுகளுடன் நடனம் ஆடுகிறார்கள். எதிரில் ஆசிரியர்களோடு அமர்ந்து நாமும் இதை கைதட்டி ரசிக்கிறோம். அப்படியானால், அவர்களின் செய்கையை நாம் அங்கீகரிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இதனால் நம் பிள்ளைகளுக்கு சமூக அச்சம் போய்விடுகிறது. அதனால், ஒரு மாணவன் துளிர்க்கும்போதே பெண்ணை உடமையாக்கப் பார்க்கிறான். இதனால்தான் சிறு வயதுக் குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்கு அடிப்போட்டுக் கொடுத் தது யார் நாம்தானே?” என்று ஆவேசப் படுகிறார்.

இதுதொடர்பாக நம்மிடம் இன்னும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சர்மா, “பள்ளிகளும் பெற்றோரும் நினைத்தால் இந்த அவலங்களை எல் லாம் துடைத்தெறிய முடியும். அதற்கு முதல் வேலையாக குத்தாட்டங்களை பள்ளிகளை விட்டுத் துரத்த வேண்டும். அடுத்தது, நமது மண்ணுக்கு மட்டுமே சொந்தமான வீர வரலாறுகளை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும். ’பள்ளித் தலம் அனைத்தும் வேலுநாச்சியார்’ என்ற எங்களது கோஷம் அதைத்தான் செய்யப் போகிறது. வேலு நாச்சியார் மட்டுமல்ல.. காலத்தை வென்ற நம் மண்ணின் காவிய தலைவர்கள் பலரையும் இப்படிப் பள்ளிகளுக்குள் கொண்டு செல்வோம்.

பொன்னேரியில் உள்ள வேலம் மாள் பள்ளியில் இந்த நாடகத்தில் நடிப்பதற்காக 100 மாணவ - மாணவி யரைத் தேர்வு செய்தோம். நாடகத்தில் அவர்களை நடிக்க வைப்பது மட்டுமல்லாது அவர்களுக்கு ‘தியேட்டர் சயின்ஸை’ முழுமையாக கற்றுத் தர வும் முடிவெடுத்தோம்.

முதலில் அவர்களுக்கு, மேடை ஒழுக்கம், ஆக்‌ஷன், ரியாக்‌ஷன், டயலாக் ரீடிங், லைட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் அத்தனை யும் சொல்லிக் கொடுத்தோம். அதன் பிறகு, உண்மையான ஸ்கிரிப்டைக் கொடுத்து நடிக்கச் சொன்னோம்.

எங்களது வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தில் அந்தந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்களைக் கொண்டே மாணவர்களுக்கும் நடிக்கச் சொல்லிக் கொடுத்தோம். இதற்காக, நாடகத்தில் நடிக்க ஒரு நாளைக்கு என்ன சம்பளமோ அதை கலைஞர்களுக்குத் தந்தோம்.

நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் மாணவர்கள் அற்புதமாக நடித்தார்கள். வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தைப் பள்ளிக்குள் கொண்டுவந்த தன் மூலம் நமது மண்ணின் பெருமையை, நாட்டுக்காக உயிரையும் தரத் துணிந்த பெண்களின் மேன்மையை, வேலு நாச்சியாருக்கு மருது சகோதரர்கள் உள்ளிட்ட ஆண் கள் பக்கபலமாக இருந்த உண்மையை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை பள்ளி மாணவர்களின் ஆழ்மனத்தில் நாங்கள் பதிய வைத்திருக்கிறோம்.

50 பள்ளிகளில்..

இந்த நாடகத்தில் நடித்த மாணவர்களில் சிலரது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தெரிவதாக பள்ளியில் இருந்து இப்போது பின்னூட்டம் தருகிறார்கள். மாணவர்கள் மத்தி யில் நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றமும் இதுதான். சென்னையைத் தொடர்ந்து, மதுரை, தேனியில் உள்ள வேலம்மாள் குழுமத்தின் பள்ளிகளி லும் இந்த நாடகத்தை அந்தப் பள்ளிகளின் மாணவர்களைக் கொண்டே நடத்தவிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் 50 பள்ளிகளில் இப்படி இந்த நாடகத்தை நடத்தத் திட்டம். அப்படி நடத்திவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் வேலு நாச்சியார் சரிதம் உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.

மண்ணையும் மக்களையும் நேசிக் கும் தரமான மாணவர்களை வார்த்து எடுத்த பெருமையும் எங்களுக்குக் கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x