Published : 18 Dec 2017 02:11 PM
Last Updated : 18 Dec 2017 02:11 PM

குஜராத் தேர்தல்: தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

வட்காம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி 84,785 வாக்குகள் குவித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சக்கரவர்த்தி விஜயகுமார் 65,946 வாக்குகளே பெற்றுள்ளார்.

முன்னதாக, தலித் தலைவர்  ஜிக்னேஷ் மேவானிக்கு காங்கிரஸ் ஆதரவுக்கரம் நீட்டியது. ஜிக்னேஷ் மேவானியை ஆதரிக்கும் வகையில் அத்தொகுதியில் காங்கிரஸ், வேட்பாளரை களம் இருக்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டிறைச்சிக்கு தடை வந்த பிறகு குஜராத்தில் சிறுபான்மையினர், தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதனை எதிர்த்து உனாவில் நடந்த பேரணி ஆகியன இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறப்பட்டது.

அந்த வகையில், வட்காம் தொகுதியில் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x